இடம்

எப்படி என்று தெரியவில்லை ஆனால் பெண்கள் எவ்வளவு வசீகரமாய் இருந்தாலும் அன்று மாலைக்குள் மறந்துவிடுகிறது அவர்களது பெயர்களும் முகங்களும் அப்படித்தான் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் பெயரற்ற முகமற்ற ஒருவள் தன் சைக்கிள் கேரியரில் என்னை அமர்த்திக் கொண்டு எனக்கு மாங்காய்கள் பறித்துத் தர கிளம்பினாள் அன்று அவள் அணிந்திருந்த தங்க நிற மூக்குத்தியும் பாதி சிதிலமடைந்த அவளது ஒற்றை அறை வீடும் மட்டும் என் நினைவிலிருந்து இப்போதும் அகல மறுக்கிறது ஏனென்றால் அந்த மூக்குத்தி அந்த வீட்டிற்கு [...]

Advertisements

Ode to joy

விசனப்பட்டு படுக்கையில் புரள்கையில் Room no.23இலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கும் பீத்தோவனின் ஒன்பதாம் சிம்ஃபனி என்னை நோக்கி ஓடிவந்து அதன் இரு கரங்களையும் நீட்டி என்னை ஆரத்தழுவிக் கொள்கிறது நான் திமிற முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் அதன் பிடி இறுகுகிறது என்னால் மூச்சுவிட முடியவில்லை பிறகு அது ஒரு பழக்கப்பட்ட நாய்க்குட்டியைப் போல் மெதுவாக என் முகத்தை தன் நாவால் வருடுகிறது சிலசமயம் இந்த உலகம் ஏன் இவ்வளவு அன்பாயிருக்கிறது சனிக்கிழமை இரவுகள் கழிவிரக்கத்துக்கானவை என்றதற்குத் தெரியாதா இந்த [...]

இப்போது வேண்டாம்

என் வீட்டின் கதவைத் தட்டுபவர்கள் யாராகினும் சொற்களின் வனாந்திரத்திற்கு வெளியே வாழ்க்கையெனும் பிரதேசத்திற்கு வெளியே காலத்திற்கு வெளியே நம்மிருவருக்குமிடையில் ஒரு உரையாடல் சாத்தியப்படும் போது வாருங்கள் உட்கார்ந்து உரையாடல் புரிவதற்கு பதிலாக ஒரு டீ அருந்துவோம்

நிற்றலைத் தாண்டி

எனக்கிருப்பதெல்லாம் ஒரேயொரு ஆசை தான் நடக்கும்போது கால்தடம் உருவாகாமல் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக காலை ஊன்றி நடக்கவேண்டும் அவ்வளவு தான்

சாதாரணம்

எல்லாம் சாதாரணமாகிவிட்ட நாளொன்றில் என்னை ஒருவன் முதுகில் குத்துகிறான் நான் அடுத்து போட வேறு சட்டை இருக்கிறதா என்று பார்க்கச் சென்றுவிட்டேன் எல்லாம் சாதாரணமாகிவிட்ட நாளொன்றில் என்னை இனி பார்க்கவர வேண்டாம் என்கிறாள் ஒரு நெய்பிஸ்கட் தரும் இன்பமும் அவள் தரும் இன்பமும் ஒன்றுதான் என்று நான் ஆசுவாசமடைகிறேன் எல்லாம் சாதாரணமாகிவிட்ட நாளொன்றில் என் நண்பன் இறக்கிறான் நான் அவனது கொள்ளியில் ஒரு சிகரெட்டைப் பற்றவைக்கிறேன் எல்லாம் சாதாரணமாகிவிட்ட நாளொன்றில் என் காயங்களில் புழுக்கள் நெளிகின்றன என்னிடம் [...]

One flew over the cuckoo’s nest

ஆயிரம் ஆண்டுகளின் இருப்பு மரமானது ஒரு நூறு தலைமுறைகளின் ஏக்கங்கள் விருச்சங்களாகின வேர்கள் நிரந்தரத்தின்மேல் அதன் மோகம் இத்தனை யுகங்கள் ஓடியபின் எத்தனையோ முடிவுகளுக்கும் தொடக்கங்களுக்கும் சாட்சியமாக வேண்டியது இருப்பினும் இங்கே எதுவும் நினைவுகூர்வதற்கில்லை இங்கு வரத்தானே இத்தனை பிரயத்தனமும் வெறுமனே நிற்றல் ஒரு தவம் ஆனால் தேக்கம் இவ்விடத்தில் புழங்குவதில்லை இறப்பிலேயே விழிப்பு வருகிறது என்று அந்தப்பக்கமாக நடந்தவன் சொல்லிவிட்டுப் போனான் வேர்கள் பூக்களாகின அதன் பழங்களில் மோட்சத்தின் விதைகள் பிறகு அந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் [...]

இன்னும் கொஞ்சதூரத்தில்

எப்படியும் கவிழப்போகின்ற சாலையில் இனிமேல் செல்வதற்கு எதிர்பார்ப்பின்மையை தவிர எனக்கு வேறு எந்த எதிர்பார்ப்புமில்லை இப்படியாக அது முடிவுக்கு வந்தது என்றபோதும் எல்லாவற்றிற்குமான பதில் கவிழ்வதில் இருக்கிறது

சீரியஸாகி

சீரியஸாகி செய்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன சீரியஸாகி காம்பஸில் ஒரு முழுவட்டத்தை பிசகாமல் வரையலாம் சீரியஸாகி மேட்டில் சைக்கிள் பெடலை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக மிதிக்கலாம் சீரியஸாகி கடும்குளிரில் ஒருபிடி தண்ணீரை மேலூற்றிக் கொள்ளலாம் சீரியஸாகி அமீபாக்களில் இன்னும் கொஞ்சம் அழுத்தத்துடன் புள்ளிவைக்கலாம் சீரியஸாகி எட்டிக்குதித்து அந்த இலையைப் பறிக்கலாம் சீரியஸாகி நேரம் முடியப்போகும் கடைசி நொடியில் ஒரு பத்து மார்க் கேள்விக்கு பதிலெழுதலாம் சீரியஸாகி பாக்கெட்டிலுள்ள கடைசி ரூபாய்களை கவனத்துடன் செலவு செய்யலாம் சீரியஸாகி விரும்புகின்ற [...]

சாரு நிவேதிதாவுக்கு ஒரு கடிதம்

உங்கள் காலா பட விமர்சனத்தைப் படித்தேன். நீங்கள் உலகசினிமா, உலக இலக்கியம் எல்லாம் கரைத்துக் குடித்தவர் என்று தெரியும். இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அதற்காக அதை 24×7 மைக் செட் போட்டு சொல்லிக் கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை. அதையெல்லாம் பார்த்த, படித்த மெச்சூரிட்டி உங்கள் எழுத்திலும் பேச்சிலும் தானாகத் தெரிய வேண்டும். இப்படி பெருமைப்பீத்திக் கொண்டு திரியக்கூடாது. கமல் மக்களைப் புரிந்துகொள்ளவில்லை, அது இது டாய் டூய் என்று நாற்பது கட்டுரைகள் எழுதுகிறீர்களே, உங்களிடமும் அதே கேள்வியைத்தான் [...]

சாலையின் முடிவில் காத்திருக்கும் ஐஸ்க்ரீம் ட்ரக்

அறைக்குத் திரும்பியதும் முதல் வேலையாக கையில் அணிந்திருந்த வாட்சைக் கழற்றி எறிந்தேன். எப்போதும் பார்த்தாலும் "இதோ 6 மணி ஆகிவிட்டது, படுக்கையிலிருந்து எழு. இப்போது 8.30 மணி, காலேஜுக்குப் போ. மதியம் 1 மணி, சாப்பிடு. 4.30 மணி, போய் சிகரெட் அடி, இரவு 11 மணி, போய் தூங்கு" என்று கட்டளையிட்டுக் கொண்டு எரிச்சலேற்றுவது. பிடிக்காத ஒரு விஷயம் உடல்மேல் நாள் முழுவதும் ஒட்டிக் கொண்டிருக்கும் கசப்பை பெருமூச்சாக வெளியேற்றிவிட்டு படுக்கையில் அமிழ்ந்தபோது மணி 4.30. [...]