கருணையினால் தான்

இன்று காலை குற்றாலம் போகலாமென்று நண்பன் அழைத்தபோது அரைமனதுடன் தான் சரி என்றேன். ஏற்கனவே பல நாட்களாக அலைக்கழிப்பில் இருக்கும் மனது அயர்ச்சி அடைந்திருந்தது. எனவே அரை மனதுடனே கிளம்பி, அங்கு போய் சேர்ந்து அந்த காட்டுப்பாதையில் ஒருவித யோனையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது எனக்கு முன்னே சென்ற சிறுவன் ஒருவன் தூரத்தில் தெரிந்த அருவியை பூரிப்புடன் பார்த்தவாறே தன் தந்தையிடம் "அருவி எவ்ளோ அழகா இருக்கு? குளிக்கலாமா?" என்று கேட்டான். தன் தந்தை ஏதோ [...]

Advertisements

Endless Poetry

ஏன் எல்லாரும் ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதும்போது அதை தான் வாசிக்க நேர்ந்த சூழ்நிலை பற்றி எழுதுகிறார்கள் என்று நான் எரிச்சல் பட்டதுண்டு. ஆனால் இந்த இடத்தில் நான் இதை சொல்லித்தான் ஆகவேண்டும். என் கல்லூரியில் கோடை விடுமுறை தொடங்கி எல்லாரும் வீட்டுக்குப் போனபின் நான்மட்டும் தனியாக அங்குமிங்கும் ஒரு restlessness உடன் அலைந்து கொண்டிருந்தேன். அவர்கள் எல்லாரும் இருந்தாலும் இதே நிலைமைதான். இருந்தாலும் அவ்வப்போது ஒன்றிரண்டு தெரிந்த முகங்களைப் பார்க்கும் ஆசுவாசமும் இல்லாமல் போய்விட்டது. இதில் [...]

​Gora: To each his own war

முன்குறிப்பு: இது நாவல் விமர்சனம் அல்ல என் 21 வருட வாழ்க்கையில் விஜய்-அஜித் கோஷ்டி, கலாச்சார காவலர்கள், தேசபக்தர்கள், தமிழ்சினிமா கோஷ்டி, கமல் பக்தர்கள், சாரு பக்தர்கள், இலக்கியவாதிகள், உலகசினிமா கோஷ்டி, ஃபெமினிஸ்ட்கள், முற்போக்காளர்கள் என்று பல தரப்பு மனிதர்களோடும் இருந்திருக்கிறேன். வேடிக்கை பார்ப்பவனாக அல்ல; அவர்களுள் ஒருவனாக. எல்லாரும் வேறு வேறு தளங்களில் செயல்பட்டாலும் ஒரு விஷயத்தில் பெரும்பான்மை மக்கள் (எந்தத் தரப்பு ஆளாக இருந்தாலும்) உடன்பட்டார்கள். அது தன் கருத்தை அடுத்தவர்கள் தொண்டையில் திணிப்பது/அடுத்தவர்களைச் [...]

பசித்த மானிடம் (Sarahah #1)

மொதல்ல நானே ஆரம்ப நிலை இலக்கிய வாசகன் தான்.. பசித்த மானிடம் தன்னளவில் ஒரு முழுமையான நாவல்.. அது ஒரு வாழ்க்கை. ஒரு மனுஷனோட சின்ன வயசுல இருந்த அவனோட முதுமைப்பருவம் வரை அவனோட ஆசைகள், கனவுகள், இச்சைகள், அவனோட சிந்தனைப் போக்கு என்று அவனோட வாழ்வியலையும் அவன் சந்திக்கும் மனிதர்கள் குறித்த அவன் பார்வை, அதனூடாக அவர்களோட வாழ்வியலையும் அநாயசமா பேசிட்டுப் போயிருப்பார் கரிச்சான் குஞ்சு. அதும் அந்த மையக் கதாபாத்திரத்திற்கு சாதாரணமான ஒரு வாழ்க்கை [...]

இருளில் அழுகின்ற யானை

நான் புத்தக விமர்சகனும் இல்லை, சீரிய இலக்கிய வாசகனும் இல்லை. இருந்தாலும் கவிஞர் நேச மித்ரன் அவர்கள் கேட்டுக் கொண்டதால் எனக்குத் தெரிந்தவற்றை, இந்த கவிதைகளில் இருந்து எனக்குப் புரிந்தவற்றை பற்றி எழுதியிருக்கிறேன். எனக்கு சாரு சொல்லி தான் மனுஷின் அறிமுகமே கிடைத்தது. அவரது வலைப்பூவில் அடிக்கடி மனுஷையும் பேப்லோ நெரூதாவையும் கம்பேர் செய்து எழுதுவார், பல மேடைகளிலும் பேசியிருக்கிறார். மனுஷ்யபுத்திரனுடைய ஃபேஸ்புக் பக்கத்தை பின்தொடரத் தொடங்கிய காலத்தில் அவரது கவிதைகளைப் படிப்பேன். ஆனால் அவற்றை முழுமையான [...]

கலைஞன் என்பவன் யார்?

எல்லாரும் எல்லா காலத்திலும் எதையோ ஒன்றை எதிர்த்துப் போராடிக்கொண்டு தான் இருக்க வேண்டியிருக்கிறது. அப்போராட்டம் தான் தாம் வாழ்வதற்கான சான்றாகவும் சிலருக்குப் படுகிறது. பிறகெப்படி தனது இருத்தலை பிரபஞ்சத்திற்கு நிரூபிப்பது? இந்த உலகை விட்டு அகன்று செல்கையில் 'நாம்' என்ற ஒருவர் வாழ்ந்ததற்கான சிறு தடயமாவது இருக்க வேண்டுமே என்ற பிரயாசை தான். ஆனால் எதற்கெதிராக போராடுகிறோம் என்பதில் இருக்கிறது ஒருவரது முதிர்ச்சி. ஒரு குறிப்பிட்ட வயதுவரை புறவுலகில் வெளிப்படையாக தெரியும் விஷயங்களோடு போராடுகிறோம். அவையனைத்தும் நம்மைச் [...]

கரிச்சான்குஞ்சும் Terence McKennaவும்

“Cultural conditioning is like software, but beneath the software is the hardware of brain and organism and by dissolving the cultural conditioning to speak English, German, Swahili or whatever, then one returns to this ur-sprach, this primal language of the animal body and can explore the real dimension of feeling that culture has a tendency [...]