சிகரெட்

முதல் இழுப்பில் கழிவிரக்கம் இரண்டாம் இழுப்பில் ஏற்றுக்கொள்ளல் மூன்றாம் இழுப்பில் நினைவுகளை அசைபோடல் நான்காம் இழுப்பில் இருளில் தூரிகையிடும் புகையை இரசித்தல் ஐந்தாம் இழுப்பில் வெளிப்படும் சொற்களை முன்னும் பின்னுமாக மேலும் கீழுமாக கலைத்துப்போடல் அடடா கவிதை பிறந்துவிட்டதே! ஆறாம் இழுப்பில் அழுகை ஏழாம் இழுப்பில் அன்பு பரிவு கருணை என்னை நானே அணைத்துக்கொள்ளல் எட்டாம் இழுப்பில் பேரமைதி ஒன்பதாம் இழுப்பில் சங்கமித்தல் கடைசி இழுப்பில் எஞ்சி நிற்கும் பூரணத்துவம்

Advertisements

எக்ஸ்ட்ரா வாழ்க்கை

நீ தேவையில்லை இது எனக்கு வெறும் எக்ஸ்ட்ரா அன்பு தானென்று கூறிவிட்டு நகர்கிறீர்கள் அன்றிலிருந்து என் காஃபியில் ஒரு ஸ்பூன் எக்ஸ்ட்ரா சுகர் சேர்த்துக் கொள்கிறேன் கடைகளில் எக்ஸ்ட்ரா ஆஃபர் எதுவும் இல்லையா என்று கடிந்துகொள்கிறேன் வாங்கிய பொருட்களின் எக்ஸ்பைரி தேதி முடிந்தபின்னும் எக்ஸ்ட்ராவாக கொஞ்சநாட்கள் என் அலமாரியில் வைக்கிறேன் மீசையை கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக மழித்தால் தோதுவாகப் படுகிறது பியரை கோப்பையில் ஊற்றும்போது தங்கும் எக்ஸ்ட்ரா நுரையை பருகுவதே போதுமானதாய் இருக்கிறது சிகரெட் முடியும் தருணத்தில் இழுக்கும் [...]

என் உளம் நிற்றி நீ

நீ குடித்து முடிக்க இந்த கடல்களும் படுத்துறங்க மலைகளும் உதைத்து விளையாட இந்த பூமியும் இருக்கிறது மேலும் நாம் குளிர்காய்வதற்கென ஒரு சூரியனும் ஓய்வெடுப்பதற்காக நட்சத்திரங்களுமென என்னிடம் உள்ளவை ஏராளம் ஏராளம்.. இவற்றையெல்லாம் தாண்டி வேறு எதை எதிர்பார்த்து என்னுடன் பேசாமல் இப்படி விரதம் காக்கிறாய் என் செல்வமே!

ஒரு கடிதம்

என் ஞானாட்சரி, உனக்கான கடிதத்தின் முதல் வரியை எழுதத் தொடங்குகையிலேயே மனம் சஞ்சலப்பட்டு விடுகிறது. வார்த்தைகளின் போதாமை நாமிருவரும் நன்கறிந்த ஒரு விஷயம். உன்மீது எனக்கிருக்கும் அபரிமிதமான அன்பையும் நான் செய்த தவறுகளுக்கான மனப்பூர்வமான மன்னிப்பையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாதுதான். இருந்தும் ஏனோ எழுதத் தோன்றுகிறது. "மனம் உய்ய வேண்டும். அதற்குத்தான் இலக்கியம் உதவும். மனத்தை உய்விக்கின்ற இலக்கியத்தை எப்போதாவது 'அன்புவழி'யைப் போன்ற ஒரு நாவலை எழுதிவிட முடியுமென்று நினைத்துத்தான் எழுதிப் போகிறேன்" என்று வண்ணநிலவன் சொல்லியிருக்கிறார். [...]

கருணையினால் தான்

இன்று காலை குற்றாலம் போகலாமென்று நண்பன் அழைத்தபோது அரைமனதுடன் தான் சரி என்றேன். ஏற்கனவே பல நாட்களாக அலைக்கழிப்பில் இருக்கும் மனது அயர்ச்சி அடைந்திருந்தது. எனவே அரை மனதுடனே கிளம்பி, அங்கு போய் சேர்ந்து அந்த காட்டுப்பாதையில் ஒருவித யோனையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது எனக்கு முன்னே சென்ற சிறுவன் ஒருவன் தூரத்தில் தெரிந்த அருவியை பூரிப்புடன் பார்த்தவாறே தன் தந்தையிடம் "அருவி எவ்ளோ அழகா இருக்கு? குளிக்கலாமா?" என்று கேட்டான். தன் தந்தை ஏதோ [...]

For tonight..

Aaj jane ki zid na karo ஒரு பெருமழை வரவேண்டும். நம் வார்த்தைகளை, வாசனைகளை, எண்ணங்களை, மயக்கங்களை, சாயங்களை அடித்துச்செல்லும் ஒரு பெருமழை வரவேண்டும். நம்மிலிருந்தே நம்மை விலக்கி நிற்கவைத்து நடக்கும் வேடிக்கை யாவையும் காண்பதற்கான ஒரு பெருமழை வரவேண்டும். அம்மழை யாவற்றையும் மறக்கச்செய்வது மட்டுமன்று; எங்கோ தொலைதூரத்தில் கவனிக்கப்படாத பிரதேசமொன்றின் அடர்ந்த இருளினுள் காளான்களுக்கு நடுவே துயில்கொண்டிருக்கும் ஒரு மலரை நினைவுகொள்ளச் செய்வதும் தான். ஆன்மாவின் நிர்வாணத்தில் தான் எத்தனை அழகு! (01.11.2018)

இன்றிரவு வருகிறேன் தஸ்தாயெவ்ஸ்கி

ஒரு நல்ல கனவு எந்நிலையிலும் நம்மை விட்டகல்வதில்லை எங்கு சென்றாலும் நம் முதுகில் ஏறிக்கொண்டு கீழே இறங்க விரும்பாத குழந்தை போல அது நம்முடன் பயணிக்கிறது ஒரு நல்ல கனவு தினமும் காலையில் நம்முடன் அமர்ந்து ஒரு டீ அருந்துகிறது ஒரு நல்ல கனவு மழைக்காலப் பின்னிரவுகளில் சப்தமில்லாமல் நம்மருகே சுருண்டு படுத்துக்கொள்கிறது ஒரு நல்ல கனவை நாம் வீட்டில் விட்டுவிட்டு வண்டியில் விரையும்போது நம் பின்னாலேயே எந்த வருத்தமுமின்றி மூச்சிரைக்க ஓடி வருகிறது யாருமில்லாத தெருவில் [...]

Path

Corner of my room Window seat Under a bus stop shade Riding pillion On the branches of a tree An apartment sofa Terrace of a buiding Median of road In the yellow streetlight Edge of a cliff or End of the horizon At one end of a handshake or Within the arms of a lover [...]

சாம்பல்

ஒவ்வொரு முறை உறங்கச்செல்லும் போதும் நான் பிரார்த்தித்துக் கொண்டு தான் படுக்கிறேன் ஆனால் ஒவ்வொரு முறையும் தப்பாது அதே கனவு வருகிறது அதே கனவில் அதே பிணம் அதே போல எரிந்துகொண்டிருக்கும்போது திடீரென நடுவே எழுந்து அருகில் நிற்கும் என் கையை இறுகப்பற்றிக் கொள்கிறது பிறகு பாதி வெந்திருக்கும் தன் முகத்தைத் திருப்பி ஏதோ சொல்ல வருவதுபோல் என்னை அப்படி ஒரு பார்வை பார்க்கிறது அதன் கண்கள் இருந்த இடத்தில் இப்போது வெறும் குழிகள் மட்டுமே இருந்தபோதும் [...]

சுமை

பாவங்களின் சுமையற்ற ஒரு முதுகில் காற்றே பாரமாகிறது அவரவர்களுக்கான சிலுவைகளை அவரவர்களே தானே சுமக்க வேண்டும் ஆயிரமாயிரம் வருடங்களாக நம் பெயர்குறித்த சிலுவைகளும் பாழடைந்து போன அறையின் ஒரு மூலையிலிருந்து நம்மை வெறித்துக் கொண்டிருக்கின்றன ஆனால் என்னை நெருடலில் ஆழ்த்துவது இதுதான் எதையாவது இறுகப்பற்றிக் கொள்ள நம் கை பரபரக்கிற போது ஒரு நபரையோ ஒரு இடத்தையோ ஒரு காலத்தையோ இறுகப் பிடித்துக்கொள்ள முடியாதபோது நம்மைச் சுற்றும் பேய்களை விரட்ட முயலும் போது மட்டுமே நாம் ஒரு [...]