For tonight..

Aaj jane ki zid na karo ஒரு பெருமழை வரவேண்டும். நம் வார்த்தைகளை, வாசனைகளை, எண்ணங்களை, மயக்கங்களை, சாயங்களை அடித்துச்செல்லும் ஒரு பெருமழை வரவேண்டும். நம்மிலிருந்தே நம்மை விலக்கி நிற்கவைத்து நடக்கும் வேடிக்கை யாவையும் காண்பதற்கான ஒரு பெருமழை வரவேண்டும். அம்மழை யாவற்றையும் மறக்கச்செய்வது மட்டுமன்று; எங்கோ தொலைதூரத்தில் கவனிக்கப்படாத பிரதேசமொன்றின் அடர்ந்த இருளினுள் காளான்களுக்கு நடுவே துயில்கொண்டிருக்கும் ஒரு மலரை நினைவுகொள்ளச் செய்வதும் தான். ஆன்மாவின் நிர்வாணத்தில் தான் எத்தனை அழகு! (01.11.2018)

Advertisements

​Bohemian Rhapsody – The Alternate View

அருண் பிரசாந்த் எனக்கு மிகவும் பிடித்த Queen-ன் அடையாளப் பாடலான Bohemian Rhapsody-யைப் பற்றி Confessions of a murderer என்று வலைப்பூவில் எப்படி அந்த பாடலின் அர்த்தத்தை Freddy Mercury வெளியிட மறுத்ததையும், அவரவர் விருப்பத்திற்கேற்ப புரிந்து கொள்ளுமாறு விட்டுவிட்டார் எனவும் எழுதியிருந்தான். அப்பதிவை படிக்க.  “ ‘Bohemian Rhapsody’ didn’t just come out of thin air. I did a bit of research, although it was tongue-in-cheek and it was [...]

Confessions of a Murderer

#BohemianRhapsody Bohemian- சமூகத்தின் கட்டமைப்புகளுக்குள் அடங்காத, சுதந்திரமான கலை வெளிப்பாடு Rhapsody- உணர்ச்சிப் பிழம்புகள் தெறிக்கும் இசைக் கோர்ப்பு Confession. இதுதான் இப்பாடலினுடைய அடிநாதம்-Theme. பாடலின் நாயகன் ஒரு டீனேஜர். அவனுடைய குழந்தைப்பருவம் வறுமையாலும் மோசமான சூழ்நிலைகளாலும் சிதைக்கப்பட தான்தோன்றித் தனமான வாழ்க்கையை வாழ்கிறான். இப்படியாக நாட்கள் சென்றுகொண்டிருக்க திடீரென ஒருநாள் ஒரு கொலையைச் செய்ய நேரிடுகிறது. அதனால் நீதியின் முன் நிறுத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மன உளைச்சல் கொண்ட நம் நாயகன் தன் தாயிடம் [...]

கரிச்சான்குஞ்சும் Terence McKennaவும்

“Cultural conditioning is like software, but beneath the software is the hardware of brain and organism and by dissolving the cultural conditioning to speak English, German, Swahili or whatever, then one returns to this ur-sprach, this primal language of the animal body and can explore the real dimension of feeling that culture has a tendency [...]

வைஷ்ணவ ஜன தோ

முதல் முறை மூன்று வருடங்களுக்கு முன் பதினொன்றாவது படிக்கும் போது 'ஹே ராம்' படத்தைப் பார்த்தேன். அப்போது அதில் தங்கியிருக்கும் சிந்தனை மற்றும் உணர்வுக் குவியல்கள் பெரிதாக புரியாவிட்டாலும் க்ளைமாக்ஸ் காட்சியும் 'வைஷ்ணவ ஜன தோ' என்று பிண்ணனியில் ஒலிக்கும் பாடலும் என்னை என்னவோ செய்தது. மீண்டும் மீண்டும் பலமுறை அந்த சீக்குவன்சை மட்டும் ஓட்டிப் பார்த்து புளங்காகிதம் அடைந்தேன். இப்போது மறுபரிசீலனையாக மறுபடியும் இப்படத்தை முழுதாக உள்வாங்கிக் கொண்டு பார்க்கும்போது கடைசியில் இந்த காட்சி ஏற்படுத்தும் [...]

உரையாடல்கள்#1

ஆன்மாவை சுத்திகரிக்கும் தூய்மையான இசை என்ற பதத்தை கேள்விப்பட்டதுண்டா?இதை கேட்டுப் பாருங்கள். அதுபோலத் தான் இருக்கும். படம் பார்த்தவர்கள் உணர்ந்து கேளுங்கள் பார்க்காதவர்கள் இந்த இசையோடு உரையாடிப் பாருங்கள். புரியும்.  (கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்) Seven Pounds-Love theme

மீள விரும்பாத கனவுகள்…

​ டயரிக் குறிப்பு 23/08/2016 நான் வழக்கமாக இரவு 9-9.30 மணிக்கு தூங்கச் சென்றுவிடுவேன். சிறுபிராயத்தில் இருந்தே நேரத்தில் தூங்கி நேரத்தில் எழும் (காலை ஆறு மணி) பழக்கம் கொண்டவன் ஆதலின் நேற்று இரவும் அப்படியே ஆனது. காலை 6 மணிக்கு எழுந்தபோது தான் நியாபகம் வந்தது இன்று மைக்ரோபயாலஜி இன்டர்னல் எக்ஸாம் உள்ளதென்று. பாடப்புத்தகத்தை எடுத்த மாத்திரத்தில் 'கடி'(கடுப்பு-என்ற சொல்லின் CMC வழக்கு) தலைக்கேறியது. அதைத் தூக்கி கடாசிவிட்டு என்ன செய்வது என்று யோசித்தபோது சாருவின் [...]