Persona (அ) உண்மையின் தரிசனம்

"சிந்திக்கும் மனிதனுக்கு ஒரு பாஷைதான் உண்டு. உண்மையின் பாஷை அது. ஜே.ஜே அதைத் தேடியவன். தேடி அலைந்தவன்." -ஜே.ஜே :சில குறிப்புகள் ஒரு நல்ல படம் (அல்லது கலை) என்பதை எதை வைத்து முடிவு செய்யலாம் என்பதற்கு பல்வேறு தர்க்கங்கள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல கலைப் படைப்பானது அதை நாம் explore செய்ய வைப்பதை மட்டும் செய்யாமல், நம்மை நாமே explore செய்துகொள்ளவும் உதவ வேண்டும். மனித மனத்திற்குள் இருக்கும் ரகசியங்கள் பல. அந்த [...]

Advertisements

​நீங்க கொஞ்சம் shut up பண்ணுங்க Charles Bukowski

ஒருநாள் இரவு Bigboss பார்த்துக் கொண்டிருந்த ஓவியாவின் தீவிர ரசிகரான Charles Bukowski பின்வருமாறு ஒரு கவிதை எழுதினார் "எல்லாவற்றையும் மிஞ்சி உங்களிடமிருந்து பீறிட்டு அது வெளிவரவில்லை யெனின் நீங்க shut up பண்ணுங்க கேளாமலே உங்கள் இதயத்திலிருந்தோ, உங்கள் மனதிலிருந்தோ அல்லது வாயிலிருந்தோ அல்லது உங்கள் வயிற்றிலிருந்தோ அது வரவில்லையெனின் கொஞ்சம் shut up பண்ணுங்க உங்கள் படுக்கையில் பெண்கள் வேண்டுமென்பதற்காய் நீங்கள் செய்வதாயிருந்தால் Please, shut up பண்ணுங்க உங்களுக்குள் இருக்கும் நீலப்பறவை வெளியே [...]

​Don’t wake me up

என் நீண்ட துயிலிலிருந்து விழித்தெழுந்து ஒரு பத்தியை எழுதிவிட்டு உறங்கி போனேன் காலையில் பார்த்தால் அதில் சாருவின் வியர்வை நாற்றம் அடிக்கிறது மல நாற்றம் அடிக்கிறது மூத்திர நாற்றம் அடிக்கிறது ஒரு எழுத்தாளனுக்கு இதுதான் அழகா என்று தூற்றினார்கள் நேற்றிரவு அதேபோல் தூக்கத்தின் நடுவே தோன்றிய கவிதை ஒன்றை எழுதிச் சென்றேன் அதில் மனுஷ்யபுத்திரன் பழக்கிய பிசாசுகள் அலைகின்றன என்று புகார் செய்தார்கள் என் அடுத்தடுத்த இரவுகளை ஆட்கொள்ளக் காத்திருக்கும் புக்கோவ்ஸ்கி எம்.வி.வெங்கட்ராம் கரிச்சான்குஞ்சு தி.ஜானகிராமன்களே நான் [...]

​Amelie சிறிய விஷயங்களின் கடவுள்

அமீலி சிறிய விஷயங்களின் கடவுள் அவளது மொத்த உலகும் பாரிஸ் நகரின் கட்டடங்கள் கடைகள் கஃபேக்கள் பார்க் பெஞ்சுகளை மட்டுமே சுற்றி உள்ளது அங்கே எளிய மனிதர்கள் நடமாடுகிறார்கள் அவளுக்கு இருக்கும் சிறிய சிறிய விருப்பங்களைக் கேட்டால் எவருக்கும் ஆச்சர்யம் தோன்றும் அவை ஒரு தானியக் குவியலுக்குள் கையை விடுவது குளத்தின் மேல் கல்லெறிவது க்ரீம் ப்ருலேவின் மேல் தேங்கியுள்ள கேராமெல்லை உடைப்பது எல்லாரும் செய்யும் விஷயங்களை அவள் செய்வதில்லை எல்லாரும் செய்யும் விஷயங்களை எல்லாரும் செய்வதுபோல் [...]

Have Fun

என் காதலிகளுள் ஒருவள் தன் கணவனுடன் நடந்து வருகையில் என்னைப் பார்த்து ரகசியமாகக் கண் இமைக்கிறாள் நான் புன்னகைத்தவாறே சொன்னேன் Have fun தோழி முதல் முறையாக கஞ்சாவை  மார்பு விம்ம இழுத்துவிட்டு புகையை வெளியே விட்டவாறு என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள் நான் அவளது கன்னத்தில் முத்தமிட்டபின் சொன்னேன் Have fun எதிரியின் நெஞ்சில் குறுவாளைச் செருகிவிட்டு கொலை செய்த பூரிப்பில் அவனது சடலத்திடம் சொன்னேன் Have fun அன்பெனப்படும் ஒன்றை முதன்முதலில் சந்திக்கும்போது அதைக் காண [...]

​மீள முடியாத பிரதேசம்

எவ்வித கசப்பும் இல்லாமல் ஒரு காதலை முறிப்பதில் ஒரு ஆசுவாசம் இருக்கிறது நிராதரவாக உணராமல் 'நாம் இனி சந்திக்கத் தேவையில்லை' என்று கூறுவதில் ஒரு மீட்சி இருக்கிறது ஒரு காதல் போனால் இன்னொன்று என்றிருப்பது தான் எவ்வளவு நிம்மதி தரக்கூடியது வெறுமைகளின்றி பிரிகையில் நாம் ஒரு நீர்க்குமிழியாகிறோம் நின்ற இடத்திலிருந்தே காற்றில் மிதக்கத் துவங்குகிறோம் ஆனால் என்னால் ஏன் மற்றவர்கள் போல் இருக்க முடிவதில்லை என் சிறகுகள் ஏன் எனக்கு இவ்வளவு பாரமாய்த் தோன்றுகின்றன அன்பே நமக்கிடையில் [...]

​​ஒரு நிமிடத்திற்குள்ளான தொலைதல்

நாம் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் ஒரு நிமிடத்திற்குள் எப்படி இப்படியொரு தனியனாகிறாய் இவ்வளவு மௌனமாகி விடுகிறாய் இத்தனை சலனமற்று நிற்கிறாய் இவ்வளவு காணாமல் போய்விடுகிறாய் என்று நீ வியப்படைந்து கேட்பது எனக்குப் புரிகிறது எனக்குப் போவதற்கு அத்தனை கைவிடப்பட்ட அறைகள் நினைவுகளின் பள்ளத்தாக்குகள் நிராகரிப்பின் பெருவெளிகள் துயரங்களின் கடல்கள் இருக்கின்றன அவை வேட்டை மிருகங்களுக்கே உரிய கூர்மையுடன் என் கவனம் சிதறிப் போகும் சில நொடிகளுக்குள் என்னை முழுவதுமாய் விழுங்கிவிடுகின்றன ஒரு சிகரெட் நீடிக்கும் அளவு நேரம் [...]