பசி

நான் இதைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. இத்தனை நாட்கள் நன்றாக உண்டும் உடுத்தியும் இருந்துவிட்டு இப்போது இதைச் செய்வது மிகவும் கூச்சமாக இருந்தது. அதுவும் என்னை மற்ற மனிதர்கள் பார்க்கும் பார்வைதான். அந்த ஒருவிஷயம் தான் செத்துவிடலாம் என்பது போலக் குறுகச் செய்தது. "சே.. எப்படி இந்த மனிதர்களால் கூச்ச நாச்சமில்லாமல் மற்றவரிடம் போய் பிச்சை கேட்க முடிகிறது?" என்று மீசையைத் தடவியவாறு யோசித்துக் கொண்டிருந்தேன். கடந்து இரண்டு வாரங்களில் வீட்டிலிருந்து தப்பித்து இங்கே ஓடி வருகையில் கொண்டுவந்த [...]

Advertisements

Persona (அ) உண்மையின் தரிசனம்

"சிந்திக்கும் மனிதனுக்கு ஒரு பாஷைதான் உண்டு. உண்மையின் பாஷை அது. ஜே.ஜே அதைத் தேடியவன். தேடி அலைந்தவன்." -ஜே.ஜே :சில குறிப்புகள் ஒரு நல்ல படம் (அல்லது கலை) என்பதை எதை வைத்து முடிவு செய்யலாம் என்பதற்கு பல்வேறு தர்க்கங்கள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல கலைப் படைப்பானது அதை நாம் explore செய்ய வைப்பதை மட்டும் செய்யாமல், நம்மை நாமே explore செய்துகொள்ளவும் உதவ வேண்டும். மனித மனத்திற்குள் இருக்கும் ரகசியங்கள் பல. அந்த [...]

​அருண் பிரசாந்த் என்பவன் யார்?

ஆம். 'அருண் பிரசாந்த்' மட்டும் தான். அருண் ராம்-உம் இல்லை. இறைவன்-உம் இல்லை. இதெல்லாம் சும்மா போலி முகமூடி. இதை நானே இப்போதுதான் உணர்கிறேன். நல்லவேளை இப்போதாவது உணர்ந்தேன். எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும். ஒரு கனவு இருக்கும். இப்படியெல்லாம் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று. அது சாதாரண மனிதர்களுக்கு பொருள், பெண் என்று சாதாரணமாக முடிந்து விடுகிறது. இலக்கியம், சினிமா என்று தன்னை அற்புதங்களுக்குள் கரைத்துக் கொண்டவர்களுக்கு கனவுகள் பிரம்மாண்டமானதாக, விஸ்தாரமானதாக இருக்கும். [...]

Analysis of crises on the basis of Planet of the Apes

இரண்டு விதமான போக்குகள் உடையவர்கள் உலகில் பெரிய அளவில் பிரச்சினைகளை துளிர்க்க விடுபவர்களில் முக்கியமானவர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஒரு ideologyக்கு தன்னை ஒப்புக்கொடுத்து அதையே தன் வாழ்வியலாக ஏற்றுக் கொள்வது தனக்கென சுயமாக ஒரு moral code இல்லாமல் அதிகார மட்டத்தில் தனக்கு மேல் உள்ளவர்களின் ஆணைகளுக்கிணங்க எந்த ஒரு எதிர்கேள்வியும் கேட்காமல் வேலை செய்வது ஹிட்லரை உதாரணமாகக் கொண்டு முதல் ரகத்தினைப் பற்றி பார்ப்போம். ஹிட்லரின் இனவெறி அனைவரும் அறிந்ததே. 'ஆர்ய இனம் தான் மனிதர்களிலேயே [...]

​Order and Chaos & An Analysis of Philosophical Principles

வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை இருமைகளாகக் காண விழைவதே மனிதர்களின் போக்காக இருக்கிறது. உதாரணத்திற்கு சரி-தவறு, நன்மை-தீமை என்று எல்லாவற்றையும் பிரித்து அடையாளம் கொடுப்பது. அவ்வாறான இருமைகளுள் ஒன்றுதான் ஒழுங்கு-ஒழுங்கின்மை. சாதாரண மனிதர்களில் இருந்து உலகின் தலைசிறந்த தத்துவவாதிகள் சிலர் வரை ஒழுங்கின் தேடலுக்கு ஆட்பட்டிருக்கின்றனர். இந்த ஒழுங்கு மற்றும் ஒழுங்கின்மை நம் உலகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களை அலசுவது தான் இந்த கட்டுரையின் நோக்கம். சராசரி மனிதனை எடுத்துக்கொண்டால், அவன் தன் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட patternஐ [...]

கொஞ்சம் Deconstruction😛

ஒரு வீடு கட்டுகிறோம். நூற்றாண்டுகள் ஓடுகின்றன. அந்த வீட்டின் சுவர்கள் மற்றும் தரை புயல், மழை, வெயில் என்று பல்வேறு காரணிகளால் சோர்வடைகின்றன. அதன் கதவுகள் கரையான்கள் அரித்து சிதிலமடைகின்றன. மேசைகள், நாற்காலிகள், இதர பொருட்கள் என அனைத்தும் காலம் என்னும் காலனால் சிதைக்கப் படுகின்றன. ஆனால் ஒரு காலத்தில் வாழ சௌகர்யமாய் இருந்தது என்றே ஒரே காரணத்துக்காக அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்க முடியுமா? அப்படி இருக்கத்தான் வேண்டுமா? அந்த வீடானது பழையது, அல்லது [...]