பசி

நான் இதைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. இத்தனை நாட்கள் நன்றாக உண்டும் உடுத்தியும் இருந்துவிட்டு இப்போது இதைச் செய்வது மிகவும் கூச்சமாக இருந்தது. அதுவும் என்னை மற்ற மனிதர்கள் பார்க்கும் பார்வைதான். அந்த ஒருவிஷயம் தான் செத்துவிடலாம் என்பது போலக் குறுகச் செய்தது. "சே.. எப்படி இந்த மனிதர்களால் கூச்ச நாச்சமில்லாமல் மற்றவரிடம் போய் பிச்சை கேட்க முடிகிறது?" என்று மீசையைத் தடவியவாறு யோசித்துக் கொண்டிருந்தேன். கடந்து இரண்டு வாரங்களில் வீட்டிலிருந்து தப்பித்து இங்கே ஓடி வருகையில் கொண்டுவந்த [...]

Advertisements

Everything is nearby

How to start it? He was so confused. He hadn't written anything as such before, hadn't even thought about it. The trembling of his fingers shamelessly revealed that he is an amateur in this. He remembered learning to write letters during his school days. It was weird for him that people have taught him to [...]

​எல்லாம் அருகில்தான் இருக்கிறது

எப்படித் தொடங்குவது? அவனுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. இதற்குமுன் ஒருமுறைகூட அவன் தற்கொலைக் கடிதமென்று எதையும் எழுதியிருக்கவில்லை. அதைப்பற்றிச் சிந்தித்ததும் இல்லை. முதன்முறையாக ஒரு செயலைச் செய்வதற்கான தடுமாற்றம் அவனது விரல் நடுக்கங்களில் வெளிப்பட்டது. பள்ளிக் காலங்களில் கடிதம் எழுதப் பயிற்சி பெற்றது நியாபகம் வந்தது. வெளியூரில் இருக்கும் நண்பனுக்குக் கடிதம், அம்மாவுக்குக் கடிதம், தன்னை உருவாக்கிய பழைய ஆசிரியருக்குக் கடிதம், தண்ணீர் பிரச்சனையை சரிசெய்யக் கோரி கடிதம், நூலகம் அமைக்கவேண்டி கடிதம் என்று என்னென்னமோ கடிதங்கள் [...]

தனிமை

“ஒரு டீ” பேக்கரியில் முன்பின் தெரியாத ஒருவன் எதிரே வந்தமர்ந்து ‘ஒரு டீ’ என்றவுடன் திடீரென எனக்கு நண்பனாகிறான். என்னைப் பொறுத்தவரை ஒருவனைப் பற்றி அவனது சாய்ஸ் ஆஃப் பெவரேஜில் இருந்தே அறிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, காஃபி குடிப்பவர்கள் மேம்போக்கானவர்கள். கூட்டத்துடன் செல்ல விரும்புகிறவர்கள். ஸ்டார்பக்ஸில் தனது கேர்ள்ஃப்ரண்ட் அல்லது பாய்ஃப்ரண்டுடன் நெருக்கமாக இருப்பதுபோல் நடித்தவாறு இன்ஸ்டாக்ராமில் புகைப்படங்களை பதிவேற்றுபவர்கள். இதோ, இப்போது என் முன் இருப்பவன் தனக்குத் தொடர்ச்சியாக வரும் ‘கால்’களை எடுத்துப் பேசாமல் மொபைலை [...]

The Arithmetic of Breasts -A Poem

எங்கள் கல்லூரியின் கவியரங்கத்தில் 'களங்கமற்ற காதல்' என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை. இந்த கவிதைக்கு அடிப்படையாய் அமைந்த கதையையும் (The Arithmetic of breasts) சில உவமைகளையும் அளித்த ரம்யா ஞானராஜன், சாரு, மனுஷ்யபுத்திரன் மற்றும் நெகிழனுக்கு நன்றிகள் The Arithmetic of Breasts என்னவென்று தெரியவில்லை சிறுவயதிலிருந்தே சிக்மன்ட் ஃப்ராய்டுடன் உலா வந்ததாலோ என்னவோ காதலென்ற சொல் என் வாக்கியங்களில் புழங்குவதில்லை நான் எழுதிய கதையாகட்டும் கவிதையாகட்டும் ஏன் என் வாழ்க்கையே ஆகட்டும் மருந்தளவிற்கும் [...]