என் உளம் நிற்றி நீ

நீ குடித்து முடிக்க இந்த கடல்களும் படுத்துறங்க மலைகளும் உதைத்து விளையாட இந்த பூமியும் இருக்கிறது மேலும் நாம் குளிர்காய்வதற்கென ஒரு சூரியனும் ஓய்வெடுப்பதற்காக நட்சத்திரங்களுமென என்னிடம் உள்ளவை ஏராளம் ஏராளம்.. இவற்றையெல்லாம் தாண்டி வேறு எதை எதிர்பார்த்து என்னுடன் பேசாமல் இப்படி விரதம் காக்கிறாய் என் செல்வமே!

Advertisements

ஒரு கடிதம்

என் ஞானாட்சரி, உனக்கான கடிதத்தின் முதல் வரியை எழுதத் தொடங்குகையிலேயே மனம் சஞ்சலப்பட்டு விடுகிறது. வார்த்தைகளின் போதாமை நாமிருவரும் நன்கறிந்த ஒரு விஷயம். உன்மீது எனக்கிருக்கும் அபரிமிதமான அன்பையும் நான் செய்த தவறுகளுக்கான மனப்பூர்வமான மன்னிப்பையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாதுதான். இருந்தும் ஏனோ எழுதத் தோன்றுகிறது. "மனம் உய்ய வேண்டும். அதற்குத்தான் இலக்கியம் உதவும். மனத்தை உய்விக்கின்ற இலக்கியத்தை எப்போதாவது 'அன்புவழி'யைப் போன்ற ஒரு நாவலை எழுதிவிட முடியுமென்று நினைத்துத்தான் எழுதிப் போகிறேன்" என்று வண்ணநிலவன் சொல்லியிருக்கிறார். [...]

​போகத்திற்குப் பிறகான ஒப்பனைகள்

போகத்திற்குப் பிறகான பெண்ணின் ஒப்பனைகளில் ஒரு பெரும் நாடகம் ஒளிந்திருக்கிறது போகத்தின் சம்பாஷணைகள் ஒன்றோடு ஒன்று மோதுகையில் சிதறிய நட்சத்திரக் கூட்டங்களை அள்ளி எடுத்து தன் பிரா ஹூக்கில் மாட்டிக்கொள்கிறாள் அவள் தன் உள்ளாடையை அணியும் போது கடவுள் அவரது தரிசனத்திலிருந்து விலகி யாரும் காணாத ஒரு வெளிக்கு மெதுவாக மிதந்து செல்கிறார் போகத்தின் பைத்தியத் தருணத்தில் கழட்டி வீசியெறிந்த தனது சட்டையையும் ஜீன்ஸையும் அவள் மீண்டும் அணியும்போது எங்களது இந்த வனாந்திரத்தின் மேல் ஒரு இருள் [...]

​மீள முடியாத பிரதேசம்

எவ்வித கசப்பும் இல்லாமல் ஒரு காதலை முறிப்பதில் ஒரு ஆசுவாசம் இருக்கிறது நிராதரவாக உணராமல் 'நாம் இனி சந்திக்கத் தேவையில்லை' என்று கூறுவதில் ஒரு மீட்சி இருக்கிறது ஒரு காதல் போனால் இன்னொன்று என்றிருப்பது தான் எவ்வளவு நிம்மதி தரக்கூடியது வெறுமைகளின்றி பிரிகையில் நாம் ஒரு நீர்க்குமிழியாகிறோம் நின்ற இடத்திலிருந்தே காற்றில் மிதக்கத் துவங்குகிறோம் ஆனால் என்னால் ஏன் மற்றவர்கள் போல் இருக்க முடிவதில்லை என் சிறகுகள் ஏன் எனக்கு இவ்வளவு பாரமாய்த் தோன்றுகின்றன அன்பே நமக்கிடையில் [...]

​​ஒரு நிமிடத்திற்குள்ளான தொலைதல்

நாம் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் ஒரு நிமிடத்திற்குள் எப்படி இப்படியொரு தனியனாகிறாய் இவ்வளவு மௌனமாகி விடுகிறாய் இத்தனை சலனமற்று நிற்கிறாய் இவ்வளவு காணாமல் போய்விடுகிறாய் என்று நீ வியப்படைந்து கேட்பது எனக்குப் புரிகிறது எனக்குப் போவதற்கு அத்தனை கைவிடப்பட்ட அறைகள் நினைவுகளின் பள்ளத்தாக்குகள் நிராகரிப்பின் பெருவெளிகள் துயரங்களின் கடல்கள் இருக்கின்றன அவை வேட்டை மிருகங்களுக்கே உரிய கூர்மையுடன் என் கவனம் சிதறிப் போகும் சில நொடிகளுக்குள் என்னை முழுவதுமாய் விழுங்கிவிடுகின்றன ஒரு சிகரெட் நீடிக்கும் அளவு நேரம் [...]

​அருண் பிரசாந்த் என்பவன் யார்?

ஆம். 'அருண் பிரசாந்த்' மட்டும் தான். அருண் ராம்-உம் இல்லை. இறைவன்-உம் இல்லை. இதெல்லாம் சும்மா போலி முகமூடி. இதை நானே இப்போதுதான் உணர்கிறேன். நல்லவேளை இப்போதாவது உணர்ந்தேன். எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும். ஒரு கனவு இருக்கும். இப்படியெல்லாம் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று. அது சாதாரண மனிதர்களுக்கு பொருள், பெண் என்று சாதாரணமாக முடிந்து விடுகிறது. இலக்கியம், சினிமா என்று தன்னை அற்புதங்களுக்குள் கரைத்துக் கொண்டவர்களுக்கு கனவுகள் பிரம்மாண்டமானதாக, விஸ்தாரமானதாக இருக்கும். [...]

கவிதை எழுதுபவர்கள் சபிக்கப்பட்டவர்கள் #2

வெளிநாட்டிலிருந்து உன் கணவன் வரும் ஒவ்வொரு முறையும் நீ என்னிடமிருந்து விலகிச் செல்ல வேண்டியிருக்கிறது உன் கண்களில் தெரியும் எனக்கான காத்திருப்பை மறைக்க நீ கான்டாக்ட் லென்ஸ் அணிய வேண்டியிருக்கிறது உன் ஆடைகளில் எல்லாம் என் தலைமுடி ஏதேனும் உதிர்ந்துள்ளதா என்று கலைத்துப்போட்டு பார்க்க வேண்டியிருக்கிறது உன் மேல் படிந்திருக்கும் என் வியர்வை வாசனையை வாசனைத் திரவியம் போட்டு மறைக்க வேண்டியிருக்கிறது நாம் இருவரும் இரவுபகலாய் உரையாடிய செல்ஃபோன் சாட்களை எல்லாம் நீ அழிக்க வேண்டியிருக்கிறது உன் [...]

நீ போ😌

சரி நீ போ நான் இதோ இந்த பைத்தியக்காரத்தனத்தின் கடலில் கொஞ்சம் திளைத்துவிட்டு வருகிறேன் வர ஒரு மணித்தியாலம் ஆகலாம் அல்லது ஒரு நூற்றாண்டு

கவிதை எழுதுபவர்கள் சபிக்கப்பட்டவர்கள் #1

என்னிடம் பேசு நான் அதிகம் கேட்கவில்லை என் கவிதைகளை ரசிக்கவும் என்னுடன் சேர்ந்து சூரியன் உதிப்பதை அல்லது அஸ்தமனமாவதைக் கண்டு சிலாகிக்கவும் மட்டும் செய் என்னிடம் பேசு ஒருவேளை நமது பின்நவீனத்துவம் பற்றிய உரையாடல்கள் முற்று பெறாததற்கு இதுதான் காரணமோ என்னவோ என்னுடன் நீ மறுபடி உரையாட மாட்டாயா என்று காலம் காத்திருக்கின்றது என்னிடம் பேசு உன் காதலன் இதற்கெல்லாம் கூடவா கோபித்துக் கொள்வான் என்றெண்ணுகிறாய் வெறுமனே பேசுவதில் உன் அறமும் நெறியும் பிறழ்ந்து விடப் போவதில்லை [...]