​Bohemian Rhapsody – The Alternate View

அருண் பிரசாந்த் எனக்கு மிகவும் பிடித்த Queen-ன் அடையாளப் பாடலான Bohemian Rhapsody-யைப் பற்றி Confessions of a murderer என்று வலைப்பூவில் எப்படி அந்த பாடலின் அர்த்தத்தை Freddy Mercury வெளியிட மறுத்ததையும், அவரவர் விருப்பத்திற்கேற்ப புரிந்து கொள்ளுமாறு விட்டுவிட்டார் எனவும் எழுதியிருந்தான். அப்பதிவை படிக்க. 

“ ‘Bohemian Rhapsody’ didn’t just come out of thin air. I did a bit of research, although it was tongue-in-cheek and it was a mock opera. Why not? 
I think people should just listen to it, think about it, and then make up their own minds as to what it says to them.”

                                      – Freddy Mercury

   

இப்பதிவு அருணின் பார்வையை மறுக்கும் நோக்கில் எழுதப் பட்டது அல்ல, மாறாக அப்பாடலைப் பற்றி என்னுடைய புரிதலே இது.

போர் வேண்டாம் என்ற Freddy-ன் கூக்குரல் இந்த rhapsody. எழுபதுகளின் பாதியில் ஈரான் – ஈராக் போர் புகைந்து எரியத் தொடங்கி இருந்தது. எங்கும் தோட்டாக்களும், குண்டுகளும் பறந்து கொண்டு இருந்தன. ஈரான் மிகவும் பின்னடைவைச் சந்தித்து கொண்டிருந்தது. எனவே ஈரான் சிறுவர்களையும் போருக்கு தயார் செய்து அனுப்பிக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட போருக்கு விருப்பம் இல்லாமல் சென்ற ஒரு சிறுவனின் பாடல் தான் இது.

அப்படிச் சென்ற அவன் வேறு வழி இல்லாமல் ஒருவனைக் கொல்ல நேரிடுகிறது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவன் இது நிஜமா இல்லை கனவா என்றே குழம்பிப் போகிறான். அவனது மன உளைச்சலும் மன மாறுதலும் Freddyஆல் மிகவும் அழகான குரலாலும்,  இசையாலும், வரிகளாலும் பாடப்பட்டு இருக்கும்.

Mama, just killed a man,
Put a gun against his head,
Pulled my trigger, now he’s dead.
Mama, life had just begun,
But now I’ve gone and thrown it all away.
Mama, ooh,
Didn’t mean to make you cry,
If I’m not back again this time tomorrow,
Carry on, carry on as if nothing really matters.
Too late, my time has come,
Sends shivers down my spine,
Body’s aching all the time.
Goodbye, everybody, I’ve got to go,
Gotta leave you all behind and face the truth.

ஒவ்வொரு வரியும்  என்னை மிகவும் ஆழமாக பாதித்து, மனதில் பதிந்த வரிகள். இப்பாடல் எனக்கு மனப்பாடமாகத் தெரியும்.

இதன் பின்னணி இசையின் விதம் தான் இப்பாடலுக்கு ” the most original song ever ” என்ற தகுதியைத் தந்தது எனக் கூறலாம். ராக் இசையில் முதன் முதலில் Opera இசை கலந்து பாடப்பட்டு இருக்கும். இந்த ஓபரா இசையில் வரும் வரிகள் எல்லாம் இரு நாடுகளுக்கும் நடக்கும் உரையாடல் போல எழுதப் பட்டு இருக்கும். ஒரு பிளாக் காமெடி சரவெடி காத்து இருக்கிறது.

Boy ( Iran): I’m just a poor boy, nobody loves me.
He’s just a poor boy from a poor family,

Spare him his life from this monstrosity.

Easy come, easy go, will you let me go?
Iraq: Bismillah! No, we will not let you go. (Let him go!)

Bismillah! We will not let you go. (Let him go!)

Bismillah! We will not let you go. (Let me go!)

Will not let you go. (Let me go!)

இப்பாடலை விட ஆழமான அர்த்தம் உள்ள பாடலை இது வரை கேட்டது இல்லை. இதற்குப் பின் அச்சிறுவன் கொதித்து எழுந்து பாடுவான், அது பாடலில் எனக்கு மிகவும் பிடித்த இடம். அந்த அனுபவத்தை பாழ் செய்ய விரும்பவில்லை, கேட்டு அனுபவியுங்கள்.

விரக்தியின் உச்சத்தில் 
Nothing really matters,
Anyone can see,
Nothing really matters,
Nothing really matters to me.
Any way the wind blows
Doesn’t even matter to me.
என்று முடிகிறது. 

நாம் அனைவரின் வாழ்விலும் சோகத்தையும், தோல்வியையும், மரணத்தையும் சந்திக்கும் போது இது போல இருக்கும். இதற்கு அவனும் விதி விலக்கு அல்ல.

இப்பாடல் அன்று முதல் இன்று வரை கேட்பவர் அனைவரையும் வியப்பில், குழப்பத்தில் ஆழ்த்திவிட்டுச் செல்கிறது. நீங்களும் கேட்டு குழம்பிக் கொள்ளுங்கள்.

எனக்கு Queenயை முதலில் பிடிக்க இரண்டே காரணம் 1. Freddy Mercury 2. Freddy Mercury

Freddy Mercury மிகவும் வினோதமான ஒரு மனிதர், நீங்கள் முதலில் பார்க்கும் போதே தெரிந்து விடும். ஆனால் Freddyன் மீது காதல் கொள்ளாதவர்கள் யாருமே இருக்க முடியாதது. நான் தீவிரக் காதலன். அவரின் வாழ்கையைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் It’s one happy tragical Fairy Tale. He is the fairy of Rock n Roll.

அவசியம் கேட்க வேண்டிய மற்ற Queen பாடல்கள்
1. We will rock you
2. Don’t stop me now
3. We are the champions 
4. Somebody to love
5. The show must go on
6. Another one bites to dust
7. I want to break free ( watch the video ).

பி.கு. 
1. Bohemian Rhapsodyன் live performance பாருங்கள் என்னைப் போல் காதல் வயப்படுங்கள்.

2. Mr. Robot  தொடரில் நாயகனாக நடித்த Rami Malek, Freddy Mercuryன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் Freddyயாக நடிப்பதாக படித்த ஞாபகம்.

                                                              -thekill

Advertisements