கொல் எனும் சொல்

இங்கே இருக்கும் எத்தனை பேருக்கு வாழ்க்கையில் ஒரு கணமேனும் யாரோ ஒருவரைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இதுவரை தோன்றாமல் இருப்பது? ஆதிகாலத்தில் இருந்தே மனிதனுடைய நினைவுகளின் அடுக்குகளில் குரூரத்தின் விதைகளும் ஒரு சாராம்சமாக கட்டமைக்கப்பட்டுக் கொண்டே தான் வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் இந்த இரத்த வேட்கையை தீர்த்துக் கொள்ள பல்வேறு குழுக்களாக பிரிந்திருந்த மனிதர்கள், எதோ ஒரு காரணத்தைக் கொண்டு செயல்பட்டனர் (அன்று நிலம், உணவு, பெண்கள் உள்ளிட்ட ஆதார தேவைகளாகவே இருந்தன இந்த காரணங்கள்). நாகரிக வாழ்க்கையில் எல்லா அடிப்படைத் தேவைகளும் பூர்த்தியடைந்த மனிதர்கள் இனம், மதம், தேசியம், சாதி முதலிட்ட சப்பைக் காரணங்களை கூறுகளாகக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் வன்முறை செலுத்துவதை நியாயப்படுத்திக் கொள்கின்றனர். நான் மேற்கூறியவை எல்லாம் மேலோட்டமான அலசலின் மூலம் கண்டறியப்பட்ட விஷயங்களே. இவை அல்லாது இன்னும் நிறைய சுவாரஸ்யமான காரணங்களும்(பழிவாங்கல்), எந்தவொரு காரணமும் இல்லாமல் வெற்று உந்துதலின் மூலம் கொலை செய்யும் ஆச்சர்யமூட்டும் மனிதர்களும் உள்ளனர்.

“I have not killed anyone by accident.I have no regrets whatsoever. I also have not killed anyone behind any uniforms,nor any religions….”

-Raman Raghav

என் வாழ்க்கையில் இருந்து இரண்டு சம்பவங்கள்:

1.நான்காம் வகுப்பின்போது நாங்கள் fight club படத்தில் வருவது போல லஞ்ச் ப்ரேக்கில் சண்டை போடுவது உண்டு. சும்மா ஒரு விளையாட்டு போல. அதிலும் பலரது பற்கள் உடையும், மூக்கில் இரத்தம் வரும், சட்டை கிழியும். அந்த காலகட்டத்தில் பள்ளியில் ஒருநாள் ஜன்னலோரத்தில் ஒரு குருவி வந்து உட்கார, அதன் அழகைப் பார்த்ததும் எனக்கு தோன்றிய இரண்டு விஷயங்கள்- ஒன்று, அதை எங்கள் வீட்டிற்குக் கொண்டு வந்து வளர்த்தால் என்ன? என்பது. இரண்டாவது, அதை அப்படியே கைக்குள் அடக்கி நசுக்கினால் அது உண்டாக்கும் அலறல் குரல்கள் எவ்வாறு இருக்கும் என்பது.

2. அதற்கும் முன்னால் நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் என் தங்கைக்கு இரண்டு வயது. அப்போதெல்லாம் நான் சாதாரணமாகவே ADHD(Attention Deficit Hyperactivity Disorder) உள்ள குழந்தை போல பல்வேறு சேஷ்டைகள், குரங்குத்தனங்கள் செய்வது உண்டு. இது இப்படி இருக்க புதிதாக எங்கள் குடும்பத்துக்குள் வந்த தங்கையானவள் அப்பா, அம்மா மற்றும் வீட்டிற்கு வரும் உறவினர்கள் முதற்கொண்டு எல்லாரது கவனத்தையும் கவர்ந்து கொள்வாள். இது எனக்கு சுத்தமாக பிடிக்காமல் போகவே ஒருநாள் அம்மா சமையலறையில் இருக்கும்போது சமையலறையின் கதவை பூட்டிவிட்டு (பூட்டிவிட்டால் வெளியே இருந்து வரும் சத்தம் உள்ளே கேட்காது) நான் எனது தங்கை மேல் அமர்ந்துகொண்டு கழுத்தை நெறித்துக் கொல்ல முயன்றேன். (அப்போது என்னவோ வெறுப்பின் காரணமாக அவளது அழுகுரல் எனக்கு இன்பமாக ஒலித்தது). பிறகு பயத்தினால் விட்டுவிட்டேன்.

அதற்காக நான் இன்னும் அப்படியே தான் இருக்கிறேன் என்று நினைத்து பயந்துவிடாதீர்கள். ஹாஹா. அது ஒரு பைத்தியக்காரத் தனமான காலகட்டம். இப்போதெல்லாம் என் தங்கை என்றால் எனக்கு உயிர். ஏன் இந்த கதையெல்லாம் சொல்கிறேன் என்றால் அழித்தலுக்கான genetic code நம் எல்லாரது உள்ளும் ஆழமாகப் பதியப்பட்டிருக்கிறது. An intent to destroy and an intent to kill. அது உடல் ரீதியான அழித்தல் மட்டுமல்ல, ஒருவரை மன ரீதியாக அழித்தலும்- அவரது ஆதார பிடிப்புகளை வேரோடு பிடுங்கி எறிதல், ஒருவரது நம்பிக்கையை சீர்குலைத்தல், துரோகம், மானபங்கப் படுத்துவது, அதிகாரத்தை அழிக்க முயல்வது(பல இடங்களில் இது மட்டும் positive ஆன விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது) என்று இந்த அழித்தலுக்கான வரையரைகள் நீண்டுகொண்டே செல்லும் பண்புடையது.

I felt like destroying something beautiful

-Fight Club

இதுவும் ஒருவிதமான necrophilia தான் என்று ‘Message bearers from the stars and necrophiles’ என்ற சிறுகதையில் எரிக் ஃபிராம் என்ற ஆராய்ச்சியாளர் வாதம் செய்வதாக வரும். அதாவது ஒரு அழகான பூவை நசுக்குவதும் அல்லது ஒரு கட்டிடத்தை இடித்துத் தள்ளுவதும் necrophilia தான். எதோ ஒன்றை மரணிக்கப்பட்ட/அழிக்கப்பட்ட நிலையில் காண விழைகிற அனைவரும் necrophiles தான் என்கிறார் அவர். ஆனால் அதே சிறுகதையில் அவரது இந்த கூற்றை எதிர்த்து வேறொரு விளக்கத்தை முன்வைக்கும் இன்னொரு ஆராய்ச்சியாளரும் இருப்பார். முடிவான விளக்கம் என்ன என்பது கதையில் சொல்லப்படாது. அதை நம்முடைய பார்வைக்கே விட்டுவிடும் பின்நவீனத்துவ கதை அது. சரி அதை விடுங்கள். நாம் topicக்கு வருவோம்.

அழித்தலுக்கு இருப்பதிலேயே சுவாரஸ்யமான காரணம் என்னவென்றால் அது ‘பழிவாங்கல்'(Revenge) தான். அதிலும் தன்னுடைய பழிவாங்கும் எண்ணம் வெறும் ‘satisfactory sense of justice’ என்று தெரிந்த பின்பும் மனவெழுச்சிகளுடன் போராடியவாறு அதை நிறைவேற்றுவது ஒரு அட்டகாசமான திரைப்படத்திற்கு உரிய one line.

Sympathy for Mr.Vengeance:

ரியூ சொற்ப சம்பளத்துக்காக ஃபேக்டரியில் வேலை செய்யும் ஒரு தினக்கூலி. காது கேட்காது வாய் பேச முடியாது. அவனுக்கு இருக்கும் ஒரே சொந்தமான அவனது அக்கா kidney failureஆல் அவஸ்தை படுகிறாள். அதற்காக தன்னுடைய kidneyஐயும் தானமாகக் கொடுக்க முன்வந்தும் match ஆகாததால் நிராகரிக்கப் படுகிறான். பின்னர் ஒரு கடத்தல் கும்பலுடன் ஒப்பந்தம் போடுகிறான். அவன் தனது கிட்னி ஒன்றையும் கூட அவன் சேர்த்து வைத்த பணத்தையும் கொடுத்தால் அவனது அக்காவிற்கு ஏற்ற கிட்னியை தருவதாக அந்த கும்பல் சொல்கிறது. இவன் பணத்தை கொடுத்ததும் கொஞ்ச நேரம் கழித்து நிர்வாணமாக பணத்தையும் தனது கிட்னி ஒன்றையும் இழந்த வண்ணம் எங்கோ கிடக்கிறான். அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்று அறிந்து மன உளைச்சல் கொள்கிறான். அந்த நேரம் பார்த்து hospitalஇல் இருந்து அவனது அக்காவுக்கு ஏற்ற கிட்னி கிடைத்து விட்டதாகவும் பணம் கட்டினால் சிகிச்சையைத் தொடங்கலாம் எனவும் தகவல் வர செய்வதறியாது திகைக்கிறான்.

அப்போது அவனது anarchist girlfriend(இந்த படத்துடைய அரசியல் பிண்ணனியும் கவனிக்கத்தக்கது. கொரியாவில் Capitalism செழித்து வளர்ந்ததால் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே உள்ள economic gap பெரிதாகிக் கொண்டே செல்கிறது. ஏழை இன்னும் ஏழையாகிறான். பணக்காரன் இன்னும் பணக்காரனாகிறான்) ஒரு பெரிய தொழிலதிபருடைய மகளைக் கடத்தி ransom கேட்கலாம். அந்த பணத்தை வைத்து அக்காவின் சிகிச்சையை மேற்கொள்ளலாம் என்றும் ஐடியா கொடுக்கிறாள். இவனும் யூ-சுன் என்ற சிறுமியை கடத்தி விடுகிறான். இவன் இவ்வாறு செய்வதை அவனது அக்கா அறிந்துவிட தனக்காக தன் தம்பி முறைகேடான காரியங்களில் ஈடுபட வேண்டாம் என்று கடிதம் எழுதிவிட்டு இறந்துவிடுகிறாள். ரியூ அவர்கள் சிறுவயதில் விளையாடிய ஆற்றங்கரையில் அவளது உடலை அடக்கம் செய்கையில் சிறுமி யூ-சுன் தவறுதலாக ஆற்றில் விழுந்து இறந்துவிடுகிறாள். இவனுக்கும் காது கேட்காததால் அவள் விழுந்ததே தெரியாமல் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது.

இதற்குப் பின்தான் படத்தில் பரபரவென நகரும் சம்பவங்கள், திடுக் திருப்பங்கள் நிரம்பிய காட்சிகளெல்லாம் வரும். ரியூ, மற்றும் யூ-சுன்னின் அப்பாவான டாங்-ஜின் ஆகிய இருவரது பக்கமும் பழிவாங்குதலுக்கு அவரவர்க்கு ஒரு satisfactory sense of justice தரக்கூடிய காரணங்கள் இருக்க கடைசியில் என்ன நடக்கிறது? யார் யாரைக் கொல்கிறார்கள்? அதன் நியாயங்கள் என்ன? என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பார்வையாளர்களாகிய நமக்கும் யார் பக்கம் சாய்வது? இரண்டு பேருமே பரிதாபத்துக்கு உரியவர்கள் தானே? இருவருக்கும் ஆழமான காரணங்கள் இருக்கின்றனவே என்று morality குறித்து ஏகப்பட்ட குழப்பங்களை வரவழைப்பதே படத்தின் முக்கிய சாராம்சம். இருவருடைய vengeanceக்கும் நம்மையறியாது ஒரு sympathy தோன்றி விடுகிறது. கடைசியில் என்ன நடந்தாலும் அது நம் மனதில் ஒரு ஆழமான வடுவை ஏற்படுத்தக் கூடியது என்ற அட்டகாசமான திரைக்கதை தான் என்னை இந்த படத்தைப் பற்றி எழுதத் தூண்டியது.

Park Chan-Wook இயக்கிய ‘Vengeance’ trilogyஇன் முதல் படம் இது. மற்ற இரண்டு Oldboy(இந்த படத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்/பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்) மற்றும் Sympathy for Lady vengeance. மூன்று படங்களிலும் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டிய படம்.

Advertisements