காணாமல் போனவன்

காணாமல் போன என்
பெயரைத் தேடி
பல நாட்களாய்
அலைந்து கொண்டிருக்கிறேன்
யாருக்கும் தெரியவில்லை
தெரியாமல் இருப்பதில்
ஆச்சர்யமில்லை தான்
இந்தத் தேடலிலிருந்து என்னை
விடுவிக்க
சிறிது நாட்கள்
உங்களது பெயர்களில் ஒன்றையேனும்
எனக்கு
கடனாய் கொடுக்க முடியுமா

Advertisements