கல்லில் வார்க்கப்பட்ட புத்தன்

எல்லா ஞானமும்
எட்டிய பின்னும்
சாக விரும்பாத
புத்தன் ஒருவன்
தன்னைச்
சிரிக்க வைக்கச் சொல்லி
குறைந்தபட்சம்
அழவாவது வைக்கச் சொல்லி
ஒரு இடையனிடம்
மன்றாடினானாம்
எனக்கு
புத்தனாய் வாழ்வதில்
விருப்பமில்லை
இடையனாய் இருக்க
உங்களுக்குச் சம்மதமா?

Advertisements