October 7,2016 இரவு

தஸ்தாயேவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ குறுநாவலை படித்துக் கொண்டிருக்கிறேன். முதலாம் இரவு என் கடந்தகால காதல் கதையின் துவக்கத்தைப் பிரதிபலிக்கிறது. முழுவதும் படித்துப் பார்ப்போம், இது முற்றிலுமாக என்னுடைய கதை தானா என்று!!

October 8,2016  காலை

நான்கு இரவுகளையும் ஒரு பகலையும் கடந்தாயிற்று. ஏனோ ஒரு மென்சோகம் என்னைச் சூழ்வதை உணர முடிகிறது. இது கிட்டத்தட்ட என்னுடைய கதைதான் என்பதாலோ என்னவோ? ஆனால் இந்த சோகம் எனக்குப் பிடித்திருக்கிறது, ஒரு இலக்கியத்தரம் வாய்ந்த காவியக்காதலை அனுபவித்திருக்கிறேன் என்று எண்ணும் போது!

-இறைவன்

Advertisements