ரெமோ- சமூக அவலத்தின் பிரதிநிதி

16 October,2016

நேத்து ராத்திரி வழக்கம்போல என் விருப்பத்துக்கு மாறாக நண்பன் Karthickகூட ‘Remo’ படத்துக்கு போயிருந்தேன். படம் போகப் போக நான் உக்காந்திருந்த seatஅ கிழிச்சுப் போட்டுட்டு பால்கனில இருந்து எகிறி குதிச்சு தற்கொலை பண்ணிக்கற ஃபீலிங் கூடிட்டே போச்சு. இந்த படத்த கழுவி ஊத்தி ஒரு பதிவ போடலாம்னு இருந்தப்ப தோழர் ஜெகதீசன் எழுதுன அட்டகாசமான பதிவு நினைவுக்கு வந்துச்சு. சோ அத இங்க ஷேர் பண்றேன்

இனி தோழரின் பதிவு:

Organised brothels, Industrialised Escorts, Managed Bar/GoGo Girls, Strippers இப்படி எல்லாம் போக independent Escorts என்கிற வகை செக்ஸ் இண்டஸ்ட்றியில் உள்ளது. முன்னது அந்த வேலையில் ஈடுபடும் பெண்களுக்கு உடல்/பண ரீதியாக முழு பாதுகாப்பு அளித்து கண்கானிக்கும் தொழில் என்றால் பின்னது சுயபாதுகாப்போடு தானே நிர்வகித்து செய்யும் தொழில். இதெல்லாம் போக Street Hookers என்கிற வகையில் செக்ஸ் தொழிலில் ஈடுபடும் பெண்கள் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட எல்லா நாட்டிலும் இருப்பார்கள்.

இவர்களுக்கு சமூகத்தின் மீதோ சனங்களின் மீதோ எந்த மதிப்பும் இல்லை. நாம் கடைபிடிக்கும் எந்த ஒழுக்கவியல் கோட்பாட்டுக்குள்ளும் அவர்களைப் பொருத்திப் பார்க்க முடியாது. பெரும்பாலும் போதை வஸ்து பயன்படுத்தி இருப்பார்கள். தெருவில் தேமே என போகிறவர்களைக் கையைப் பிடித்து இழுப்பார்கள், ‘என்ன’ என்று கேட்டால் சிரிப்பார்கள், அவர்களாக சம்பந்தமே இல்லாமல் ஏதாவது பேசுவார்கள், மறுத்தால் கேவலமாக திட்டுவார்கள், சில நேரங்களில் அடிப்பார்கள், திடீரென அழுவார்கள், மீண்டும் சிரிப்பார்கள். இப்படி நம்மால் கற்பனை செய்யமுடியாத அளவு குணாதிசயங்களை சடுதியில் காட்டி மிரளச்செய்வார்கள். இவர்கள் எல்லாம் Street Hookers என்று நமக்குத் தெரிவதால் ஆழ்மனதில் எந்த சஞ்சலங்களையும் ஏற்றிக் கொள்வதில்லை.

எதைப் பார்த்தாலும் ஆழ்மனதில் பொதித்துவைக்கும், அதை செய்து பார்க்க ஆசைப்படும், அதைப்பற்றிய தெளிவு கிடைக்கவில்லை என்றால் சாகும் வரை அதே மனநிலமையோடு இருக்கும் குழந்தைப் பருவத்து ஆண்களை சேர்த்து குடும்பத்தோடு இந்த 2016 ல் U certificate வோடு வரும் ரெமோ படத்துக்குச் செல்கிறார்கள். அதில் டாக்டருக்குப் படித்து குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கும் ஒரு பெண்ணை மேலே சொன்ன Street Hooker ன் குணாதிசயங்களை ஒத்து காட்டுகிறார்கள். படத்தில் வரும் டீன் டாக்டர் நர்ஸ் எல்லோரையும் லூசாகவே காட்டுகிறார்கள். அதை அந்த குழந்தை பார்த்து சிரிக்கிறது. குடும்பமும் சேர்ந்து சிரிக்கிறது. நாளை அந்த குழந்தை வளர்ந்து முழு ஆண் ஆக மாறிய பிறகு அவனிடம் என்ன எதிர்பார்க்க முடியும் ?!!

இந்த டிரக்டர் கட்டச்சுன்னிகள் எல்லாம் பெண்களே இல்லாத காட்டில் வாழ்ந்துவிட்டு படம் எடுக்க மட்டும் சென்னை வருவாய்ங்களோ என்ன எழவோ

சமூகத்தின் முக்கியமான நபர்கள் உற்று நோக்கும், பெண்களை ஆண்கள் எப்படி வதைக்கிறார்கள் என நீட்டி முழக்கிப் பேசும் பெண்களும்/ஆண்களும் இந்த படத்தைப் பார்க்கிறார்கள். எந்த கண்டனத்தையும் பதிவு செய்யாமல் ‘படம் சிரிப்பா இரிக்கி’ என்றோ அல்லது அமைதியாகவோ கடந்து செல்கிறார்கள்.

குழந்தைகளை இது மாதிரியான படங்களுக்குக் கூட்டிச் செல்லும் பெற்றோர் செய்வதும், இவர்கள் செய்வதும் எவ்ளோ பெரிய அயோக்கியத்தனம் ?!!

நான் இருப்பது நாராக்கூ மெண்டல் சமூகம் என்பதை நினைத்து பெருமையாக இருக்கி

நகைச்சுவை என்கிற முலாமில் வருகிற இந்த மாதிரியான பொறுக்கித்தனமான படங்களுக்கு தயவு செய்து உங்கள் குழந்தைகளைக் கூட்டிச் செல்வதையாவது தவிர்க்கலாம் அய்யா, தாயே

Advertisements