எங்கள் காலேஜில் நடந்த Tamil Literature போட்டியில் ‘சிறுகதை எழுதுதல்’ பிரிவில் நான் எழுதிய கதையின் ஒரு சிறிய பகுதி. மொத்த கதையும் என்றாவது ஒருநாள் வெளியிடப்படும்.

இனி கதை:

“அவ்ளோதான் பேசுவியா? நான் இன்னும் நெறய எதிர்பாக்குறேன்” என்று தாய்ப்பாலுக்கு ஏங்கும் குழந்தை போல பாவமாக, கெஞ்சலாக, கொஞ்சலாகக் கேட்டான் அருண். “நான் அதிகம் பேசுறது பெட்ல தான்” என்று அவள் குறும்பாகச் சொன்னாள். அந்த குறும்பு அருணின் காதலும் காமமும் நிறைந்த பார்வையின் ஊடே வெட்கமாகத் தன்னை அடையாளம் கண்டது.

அவளைத் தன் இரு கைகளிலும் வாஞ்சையுடன், அழகாகத் தூக்கிக்கொண்டு போய் படுக்கையில் கிடத்தினான். ஆனந்தத் தாண்டவம் அரங்கேறியது. இல்லை, இது ருத்ர தாண்டவம். ஆனால், கொஞ்சம் வித்தியாசமானது. இந்தத் தாண்டவம் சிவனும் பார்வதியும் சேர்ந்து ஆடுவது. சிவன் மட்டும் ஆடினால் அது ரேப் என்றாகிவிடும் அல்லவா? இவர்கள் புரிவது காதலன்றோ! எல்லாம் முடிந்த பின்னர் அவள் சிரித்தவாறே கேட்டாள், “நெறய பிட்டுப்படம் பாப்பியோ?”

-இறைவன்

Advertisements