மீள விரும்பாத கனவுகள்…


டயரிக் குறிப்பு 23/08/2016

நான் வழக்கமாக இரவு 9-9.30 மணிக்கு தூங்கச் சென்றுவிடுவேன். சிறுபிராயத்தில் இருந்தே நேரத்தில் தூங்கி நேரத்தில் எழும் (காலை ஆறு மணி) பழக்கம் கொண்டவன் ஆதலின் நேற்று இரவும் அப்படியே ஆனது. காலை 6 மணிக்கு எழுந்தபோது தான் நியாபகம் வந்தது இன்று மைக்ரோபயாலஜி இன்டர்னல் எக்ஸாம் உள்ளதென்று. பாடப்புத்தகத்தை எடுத்த மாத்திரத்தில் ‘கடி'(கடுப்பு-என்ற சொல்லின் CMC வழக்கு) தலைக்கேறியது. அதைத் தூக்கி கடாசிவிட்டு என்ன செய்வது என்று யோசித்தபோது சாருவின் ‘கலகம் காதல் இசை’ கண்ணில் தென்பட்டது. 

நேற்று இரவு தூங்கச் செல்கையில் ரௌத்திரம் படத்தின் ‘மாலை மங்கும் நேரம்’ என்ற பாடலின் இசையில் லயித்திருந்தேன். இப்போது இதை படிக்கத் தொடங்கிய போது நான் தங்கியிருக்கும் ஹாஸ்டலில் என் பக்கத்து அறையில் Coldplayஇன் Hymn for the Weekend ஒலித்துக் கொண்டிருந்தது. அடடா! என்ன இசை,,என்ன குரல்! பியான்சேவின் காந்தக் குரலுக்கு அடிமை ஆகிவிட்டேன். இனி பியான்சேவின் மற்ற பாடல்களைத் தேடி தரவிறக்கம் செய்து கேட்க முடிவு செய்திருந்தேன். அந்த இசை மோகத்துடனே இசை பற்றிய ஒரு புத்தகத்தைப் படிப்பது ஒரு தனி அனுபவம். 

அப்புத்தகத்தின் உள்ளே ஆழமாக மூழ்கிய தருணம், சிறிது நேரத்தில் சிலேவில் இராணுவ ஆட்சியை எதிர்த்து சுதந்திரத்தை நாடிய மக்களின் போராட்டம் அடக்குமுறைக்கு உள்ளாகியதும் அச்சுதந்திர தாகம் விக்டர் ஹார்ரா மற்றும் வயலத்தா பாராவின் மூலமாக இசையாய் மறுபிறவி எடுத்து எளிய மக்களிடையேவும் பீறிட்ட மாதிரி தூக்கமானது என்னுடைய இன்டர்னல், மதிய வகுப்புகள், நான் படித்துக்கொண்டிருக்கும் சாருவின் எழுத்து ஆகிய அனைத்தையும் புறந்தள்ளி என்னை ஆட்கொண்டது. 

அரை மயக்க நிலையில் இருக்கும்போது தோன்றும் கனவுகள் நாம் தூங்கும் முன்னர் கடைசியாக உள்வாங்கிய விஷயங்களை பற்றியே வரும். அதுபோல சிலேவின் அடக்குமுறை ஆட்சியும் அதனை தன்னுடைய இசை மூலமாக எதிர்த்து போராடிய விக்டர் ஹார்ராவும் என் கண்முன் தோன்றினர். ‘You cannot have a revolution without music’ என்ற வாசகத்தை பேன்னர்களில் பார்த்துக் கொண்டிருந்த நான் திடீரென்று சிலேவின் வீதிகளில் நின்றுகொண்டிருந்தேன். கண்ணீர்ப்புகை குண்டுகளுக்கு இடையே தன் நண்பனை கலவரத்தில் இழந்த விக்டர் ஆவேசமாக பாடிக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்துபோனேன். 

பிறகு திடீரென்று அங்கிருந்து மறைந்த என் பிரக்ஞையில் ரஹ்மானின் ‘நாதான் பரிந்தே’ ஒலிக்கத் தொடங்கி ஒரு கடற்புயல் போல அது என்னை மூழ்கச்செய்து ஆட்கொண்டது. ஒரு rock இசைக் கலைஞனின் இயலாமையும் காதலிக்கான ஏக்கமும் இந்த கேவலமான சமூகத்தில் இருந்து விடுதலை பெறத் துடிக்கும் அவனது மனவெழுச்சிகளும் என்னைக் கண்ணீரில் ஆழ்த்தின. இந்தளவு உயிரோட்டத்துடன் நான் என்றைக்கும் இருந்ததில்லை. அரைப் பிரக்ஞையுடன் இருந்த எனக்கு இக்கனவு நிலையிலிருந்து மீள மனம் வரவில்லை. 

பி.கு. நான் விரும்பிக் கேட்கும் ரகத்திலும் வித்தியாசமான பாடல்களைக் கொண்டிருப்பதாயும் உள்ள படங்கள்

1.Tasher desh (Bengali)

2.Frank (English)

3. கம்மட்டிபாடம் (Malayalam)

4.Into the wild (English)

5.Tamasha (Hindi)

6. Dead man walking (English)

7. Gangs of Wasseypur (Hindi)

என்னைக் காதலுறச் செய்யும் பிண்ணனி இசையைக் கொண்டுள்ள படங்கள்

1.Amelie (French)

2. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (Tamil)

3. A bittersweet life (Korean)

4. ஆரண்ய காண்டம் (Tamil)

5. Malena (Italian)

6. மயக்கம் என்ன (Tamil)

7. Requiem for a dream (English)

Advertisements