La femme n’existe pas

நம்மில் பலர் செக்ஸை குழந்தை பெறுவதற்காகவும், இச்சைகளை தீர்த்துக் கொள்வதற்காகவும் மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் என்னைப்போன்ற ரசனையான ஆட்களிடம் கேட்டால் செக்ஸை ஒரு கொண்டாட்டம் என்றே கூறுவர். அது காதலன்-காதலி அல்லது கணவன்-மனைவி உறவை வலுவாக்குவதற்கு ஒரு முக்கியமான கருவி என்பது திண்ணம். முதலில் குறிப்பிடப்பட்ட வகையறாவைச் சேர்ந்த ஆட்கள் உடலுறவு கொள்ளும் முறையில் பெரும்பாலும் ஆண்களே dominator ஆகவும் பெண்கள் submissive ஆகவும் இருப்பது வழக்கம். ஆனால் இரண்டாவது வகையான ஆட்களின் உடலுறவில் ஆண், பெண் இருவரும் சமமாக பங்காற்றுவர். 

இதில் ஒரு நுணுக்கமான சமூக அரசியல் ஒளிந்திருக்கிறது. முதல் வகையறா ஆட்களின் குணாதிசயத்தையும் பின்வரும் சம்பவத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். Game of Thronesஇல் டெனேரிஸ் டார்கெரியன் மணமாகி சில காலத்திற்கு தன் கணவனால் ஒரு அடிமையைப் போல நடத்தப்படுவாள். அவள் சென்ற டோத்ராக்கி குலத்திற்கே பெண்கள் ஒரு போகப்பொருளாகவே பயன்பட்டனர். கணவன் விரும்பிய போதெல்லாம் வந்து புணருவான். இவளுக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா? மாதவிடாய் காலமா? என்றெல்லாம் அவனுக்குக் கவலையில்லை. அதும் doggie positionஇல் மட்டுமே உடலுறவு கொள்வான். சில காலம் சென்றதும் ஆணாதிக்கத்தை பொறுக்க முடியாத டெனேரிஸ் அவன் புணருகையில் அதை பாதியிலேயே நிறுத்தி அவன் மீதேறி இவள் dominating positionஐ ஏற்றுக்கொள்வாள். 

இந்தியாவில் பெரும்பான்மை ஆண்கள் இம்முதல் வகையைச் சேர்ந்தவர்களே. வேண்டிய போது ஏறி வந்து புணர்வது. பின்னர் தான் உச்சத்தை (Orgasm) அடைந்தவுடன் நிறுத்திக் கொண்டு திரும்பிப்படுத்து தூங்கிவிடுவது. இந்த கேடுகெட்ட உடலுறவு நீடிப்பது சில நிமிடங்கள் மட்டுமே. தன் துணைவி உச்சத்தை அடைந்தாளா? செக்ஸில் அவளுடைய விறுப்பு, வெறுப்புகள் என்ன? என்பதில் துளி கூட அக்கறை காட்டுவதில்லை. உச்சத்தை நோக்கி செல்கின்ற வழியில் பாதியிலேயே நிறுத்திவிட்டால் அவள் என்ன கைமைதுனம் செய்தா தன் தாபத்தை தீர்த்துக்கொள்வாள்? இப்படியான சில பல விஷயங்களே பெண்ணானவள் கணவனை விட்டுவிட்டு வேறு ஆணை நாடுவதற்கு காரணமாக அமைகிறது. இது மேலை நாடுகளில். நம் நாட்டிலோ ‘கல்லானாலும் கணவன். கரமைதுனம் செய்தாலும் புருஷன்’ என்ற வெட்டி வீராப்புகளால் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் பெண்கள் சகித்துக்கொண்டே காலத்தைக் கழித்துவிடுகின்றனர். 

இதுபோன்ற ஆண்களுக்கு பெண்ணின் உறுப்பு தன் விந்துவை இறக்குவதற்கு தோதான ஓட்டைகளே. இதன் சைக்கலாஜிக்கல் அடிப்படை என்ன என்பதற்கு பல கருத்துகள் வலம் வந்தாலும் Jacques Lacan கூறிய ‘la femme n’existe pas’ (there is no such thing as woman) என்ற கருத்தை ஒட்டி வரும் விவாதம் என்னை கவர்ந்ததால் அதை இங்கே பகிர்கிறேன். எனக்குப் புரிந்த பாணியில். ஆனால் அதற்கு முன்னர் நாம் Structuralism பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். 

நம்மைப் பொருத்தவரை நம் கண்முன்னால் பார்த்தவற்றை மட்டுமே ஒரு திடமான வடிவத்தை உடையதாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிற விஷயங்களுக்கும் வடிவம் இருக்கிறது என்பதே Structuralism. உதாரணமாக ஒரு Leprechaunஐ எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு குள்ளமான தோற்றம், கூர்மையான காதுகள், பச்சை நிற மிளிரும் கண்கள் இருப்பதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதல்லவா? அப்படியென்றால் a Leprechaun exists. இந்த realityஇல் கற்பனை உலகத்தையும் ஒரு dimensionஆக ஏற்றுக்கொள்ள வேண்டும்; இங்கு exist ஆகும் விஷயங்கள் ‘Sein’ என்று அழைக்கப்படும். Sein இரண்டு வகைப்படும்; ஒன்று ‘existenz’- நீங்கள், நான், விலங்குகள், மரங்கள், இதர பொருட்கள் என physical, metaphysical ஆகிய இரண்டு dimensionகளிலும் exist ஆவன. இரண்டாவது ‘bestand’- Leprechaun போல் கற்பனை உலகத்தில் மட்டுமே சஞ்சரிக்கக் கூடியன. 

இந்த Seinற்கு எதிரான எந்த dimensionஇலும் exist ஆக முடியாத பொருட்கள் ‘Nichtsein’ என்றழைக்கப்படும். உதாரணமாக ஒரு 2D cubeஐ எடுத்துக்கொள்ளுங்கள். Cube என்பது ஒரு 3D வஸ்து, அதனால் எந்த உலகத்திலாவது 2Dஇல் உலவ முடியுமா? இப்படிப்பட்ட முரண்களே Nichtsein என்கிற வகுப்பை ஆக்கிரமிக்கின்றன. இதுபோன்ற ‘Nothingness’ ரியாலிட்டிக்குள் வருவது சொற்களின் உதவியுடன் மட்டுமே. Language இல்லையென்றால் Nichtsein இல்லை. 

மனிதர்களின் உலகில் Man, Woman என்று பிரிக்கப்படுவதற்கு உதவும் பிரதான கருவி Penis ஆகும். Penis இருப்பவர் ஆண்; இல்லாதவர் பெண். இக்கருத்தை நன்றாக உற்று கவனியுங்கள். பெண் என்பவள் ‘having vagina’ என்ற சமநிலையிலிருந்து கீழிறக்கப்பட்டு ‘not having penis’ என்ற negative positionற்கு தள்ளப்படுகிறாள். இதுவே பெண்கள் பெரும்பாலும் submissiveஆக கருதப்படுவதற்கு காரணம். உடலுறவில் அவள் ஒரு passive receiver ஆகவே இருந்துவிடுகிறாள். இந்த Giver-Receiver கோட்பாடு தான் ஆண்-பெண் சமத்துவத்தை சீர்குலைக்கிறது. 

Penis தனக்குரிய existenz நிலையைத் தாண்டி Phallus எனப்படும் sexualityஇன் representation ஆக மாறுகிற போதுதான் இந்த சீர்குலைதல் நடக்கிறது. பெண்ணின் vaginaவும் ஒரு உறுப்பே ஒழிய அது ‘lack of penis’ என்பதில்லை என்ற மனநிலையை முதலில் நாம் வளர்க்க வேண்டும். யோசித்துப்பாருங்கள்; ஒரு female phallusஐ, பெண்ணிடத்தில் ஆணுறுப்பை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அப்படி முடிகிறபோது அது சமூகம் வறையறுத்துள்ள ‘Woman’ என்பதன் அர்த்தம் போய் ஒரு முரணாக நிற்கிறது. Female phallus is a Nichtsein, என்கிற வகையில் ‘la femme n’existe pas’ என்று Lacan கூறுவது சாத்தியமாகிறது.

Advertisements