TalkTaboo-A Frustrated Man’s Sexual Adventures

மனிதர்கள் (முக்கியமாக பெண்கள்) தங்களை அழகுபடுத்திக் கொள்வதன் basic psychologyயே ஒரு attention seeking மனநிலை தான். எதிர்பார்த்த attention தன் கணவனிடம் அல்லது காதலனிடம் கிடைக்காமல் போகும்போது அதை வேறு எங்காவது தேடத் துவங்குவர். காதலி கிடைக்கும்வரை அவளை துரத்தித் துரத்திக் காதலித்தும் அவளது அங்கங்களை அழகழகாக வர்ணித்தும், காதலிக்க ஆரம்பிக்கும் போதும் மணவாழ்க்கையின் தொடக்கத்திலும் அவர்களுக்குப் பார்த்துப் பார்த்து பணிவிடை செய்தும் ஆண்கள் அவர்களை கவர்கிறார்கள். பின்னர் நாட்கள் செல்லச் செல்ல ‘என்ன ஆனாலும் இவள் நம்முடன் தானே இருக்கப்போகிறாள்’ என்ற மேம்போக்குத்தனமும், relationshipsஇன் consistency தரும் சலிப்பும் சேர்ந்துகொள்ள கொஞ்சம் கொஞ்சமாக ஆண்களின் சிந்தனையில் தங்களது துணைவிக்கான இடம் குறுகிக்கொண்டே போகும். மணம்புரிந்து சிலபல வருடங்கள் ஓடிய பிறகு அவள் எங்கு இருக்கிறாள், என்ன செய்கிறாள் என்றுகூட தெரியாத அளவுக்கு ஆகிவிடுவோம்.

படம் Shostakovichஇன் ‘Suite for Variety Stage Orchestra’ இசையுடன் துவங்குகிறது. கணவன் பில்(Tom Cruise), மனைவி ஆலிஸ்(Nicole Kidman) இருவரும் நண்பர் ஒருவரின் partyக்காக கிளம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆலிஸின் naked body நமக்கு காட்டப்படுகிறது. அவள் கட்டழகு கொண்ட பதுமை போல் காட்சியளிக்கிறாள். பின்னர் விதவிதமான make up உம், super sexyஆன உடை ஒன்றையும் அணிகிறாள். தன் கணவனிடம் “How do I look?” என்று அவள் கேட்க அவன் திரும்பிக்கூட பாராமல் “You look great” என்று சும்மா formalityக்காக பதிலளிக்கிறான். அவள் அதைப்பற்றி கேட்கையில் ‘You always look beautiful” என்று மழுப்புகிறான்.

Partyஇல் இரண்டு desirable பெண்கள் பில்லிடம் flirt செய்கின்றனர். ஆலிஸ் அதைப்பார்த்து கொஞ்சம் பொறாமைப் படுகிறாள். அப்பொது ஒரு செல்வந்தன் ஆலிஸின் அழகில் மயங்கி அவளிடம் பலவந்தமாக flirt செய்கிறான். அவளும் விளையாட்டாக உடன்படுகிறாள். அவளை எப்படியாவது தன்னுடன் sex கொள்ள ஒத்துழைக்க வைக்க பாடுபடுகிறான். “நீ நினைத்தால் இந்த அறையில் உள்ள எப்பேர்ப்பட்ட ஆளையும் அடைய முடியும் என்ற நிலையில் ஏன் ஒருவனிடம் மட்டும் உன் இளமையையும் அழகையும் வீண் செய்கிறாய்?” என்று அவனுடைய attempts to seduce நீண்டுகொண்டே செல்கிறது, அவனது உறுப்பைப் போல. இவ்விடத்தில் அவன் கூறும் வசனம் ஒன்று நமது சமுதாயம் உருவாக்கி வைத்துள்ள marriage என்னும் பந்தத்தை கலாய்ப்பது போல் அமைந்துள்ளது. -“ஒரு காலத்தில் பெண்கள் திருமணம் செய்துகொள்வது தங்களது virginityஐ இழக்க மட்டுமே. அதற்குப்பின்னர் அவர்கள் யாருடன் வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்பது ஒரு வசதி.” ஆனால் என்னதான் அவன் முயன்றாலும் ஆலிஸ் மறுத்துவிடுகிறாள்.

மறுநாள் இரவு ஆலிஸும் பில்லும் weed புகைக்கிறார்கள். போதையில் உள்ளபோது எந்த inhibitionஉம் இருக்காது என்பதற்கேற்ப ஆலிஸ் தன் கணவனிடம் அந்த இரு பெண்களைப் பற்றிக் கேட்கிறாள். பில்லும் பதிலுக்கு, இவளிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தவனை பற்றிக் கேட்க ஆலிஸ் தன்னை அவன் seduce செய்ய முயன்றதாகக் கூறுகிறாள். “So he wanted to fuck my wife. I can understand it” என்று பில் சாதாரணமாகக் கூறி சிரிக்கிறான். அந்த வரிகளின் Casual attitudeஐ பார்த்து ஆலிஸுக்கு கோபம் வந்துவிடுகிறது. “என்மேல் உனக்கு கொஞ்சம் கூட possessiveness, jealousy இதெல்லாம் இல்லையா?” என்று கேட்கிறாள். பொதுவாக தன் துணையின் மீதுள்ள இந்த possessiveness, jealousy போன்ற விஷயங்கள் எல்லாம் அவர்களது sexualityக்கு நாம் கொடுக்கும் recognition அல்லது acknowledgement தான். எல்லோரும் தன் இணை தன்மீது கொஞ்சமேனும் பொறாமைப்பட வேண்டும்; தன்னுடைய இருப்பின் அவசியத்தை தன் partner உணரவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் தாம். இந்த வஸ்துக்கள் எல்லாம் குறைபடும்போது வரும் ஏமாற்றம்தான் நம்மை நம் partnerஇடம் இருந்து அன்னியப்படுத்துகிறது.

அவளது கேள்விக்கான பில்லின் பதில் அவளை இன்னும் furious ஆக்குகிறது. “நீ தவறு செய்ய மாட்டாய் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் நீ என் மனைவி. நம் குழந்தையின் தாய். மேலும் பெண்களால் அப்படி யோசிக்க முடியாது. அவர்களுக்கு commitment, security போன்ற விஷயங்கள் உண்டு. ஆனால் ஆண்கள் அப்படி இல்லை.” என்று அவன் கூறுகிறான். ‘நமது மணவாழ்க்கையும் குழந்தையும் நீ பெண் என்ற காரணமும் உன்னை கட்டிப்போடும் சங்கிலிகள். நீ எனக்கு மட்டும்தான் சொந்தம் என்பதால் நான் எதற்காக உன் மீது பொறாமைப்பட வேண்டும்?’ என்பதை உணர்த்தும் பில்லின் தொனி ஆலிஸை ஒரு உண்மையை உளற வைக்கிறது. போன வருடம் vacation சென்றிருந்த போது அங்கு ஹோட்டலில் ஒரு naval officer மீது தான் கொண்ட lustஐ பில்லிடம் ‘விவரமாகக்’ கூறுகிறாள். அவனுடன் ஒரே ஒரு இரவை கழிக்க தன் கணவனையும், ஏன், தன் ஏழு வயது குழந்தையையும் கூட விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்ததாக அவள் கூற பில் அதிர்ச்சியடைகிறான். ஆலிஸும் தனது மோசமான எண்ணங்களால் உணர்ச்சிவயப்பட்டு அழத் துவங்குகிறாள். கோபப்படுகிறாள். அந்த அளவுக்கு அவளது மணவாழ்க்கை அவளை பாதித்திருக்கிறது. 

படத்தை கதையின் முக்கியமான பகுதிகளை நோக்கி திருப்பிவிடும் inciting incident இதுதான். A spark of jealousy. ஆலிஸ் அப்படி செய்திருப்பாளா? இப்படி ஆகியிருக்குமோ? உண்மையிலேயே இது நடந்திருந்தால் என்ன செய்வது? என்று பில்லின் சிந்தனைகள் கேள்விகளால் அவனை துளைக்கிறது. Fantasy கூட betrayal தான் என்று அவன் மனம் புளுங்குகிறது. தனக்கு சொந்தமான பொருளை கற்பனையில் கூட மற்றொருவன் பயன்படுத்துவது பில்லுக்கு பிடிக்கவில்லை. மேலும் பில் சாதுவான ஆளாக இருப்பதால் நேரடியாக ஆலிஸிடம் சண்டை போட விரும்புவதில்லை. இதனால் எண்ணங்களும் உணர்வுகளும் அகத்தினுள்ளே கலவரம் செய்ய vulnerable ஆகவும் கோபமாகவும் உணர்கிறான். இனிமேல் தான் மட்டும் எப்படி யோக்கியவானாக இருக்கலாம் என்று தன்னுடைய perversionsஐ physical dimensionற்கு கொணர்கிறான். அவனுடைய பிறழ்வுக்கான பயணங்கள் தொடங்குகின்றன.

‘தன்னுடைய மனைவியை ஏமாற்றப்போகிறோம்’ என்ற பயம் தொற்றிக்கொள்கிறது. திருட்டுமாங்காய் இனிக்கும் என்பதற்கேற்ப பயத்தினூடே excitementஉம் வந்துவிடுகிறது. பல்வேறு fanstasyக்களை வாழ்ந்து பார்க்க நினைத்து பயணம் கொள்கிறான். இதற்குமேல் கதையைச் சொன்னால் படத்தை பார்க்கும்போது உங்களுக்கு சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். இனிதான் படத்தில் நம்முடைய consciousness, morality போன்ற வஸ்துக்களை உலுக்கி அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் அரங்கேறும் என்பதை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். 

நம் சமுதாயத்தில் புனிதமாகக் கருதப்படும் Marriage என்ற பந்தம் எவ்வளவு போலியானது. Marriage என்ற சொல் நம் வசதிக்கேற்ப பயன்படுத்துவதற்கு ஏதுவான ஒரு euphemism தான். Relationship என்ற வார்த்தை அர்த்தமற்றது; இது ஒரு symbiotic வாழ்க்கை முறை, போன்ற கருத்துக்களை இதைவிட அழுத்தமாகச் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். பெரும்பாலானவர்களுக்கு தன்னுடைய partner என்பவர் வெறும் prize தான். அடையும்வரை போராடுவது, அடைந்தபின் சிறிது காலம் அடைகாப்பது, பின் கழற்றிவிடுவது. நீங்கள் என்னதான் இல்லை என்று தர்க்கவாதம் புரிந்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை. உங்களது ஆழ்மனம் உங்களை இனம் கண்டுவிடும். 
                

 “Consciousness is just a charade that you wear for yourself and the society you’re living in”. 

அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் sexual fantasies உண்டு. நாம் காணும் கனவுகளில் மூன்றில் ஒரு பங்கு செக்ஸுடன் தொடர்புள்ளவை என்று studies கூறுகின்றன. 

படத்தின் ஒரு இடத்தில் ‘Masked Ball Orgy Sequence’ வரும். அதில் மரபுகளை உடைத்து சுக்குநூறாக்கும் extramarital sex, exhibitionism, voyeurism, homosexual sex, gangbang, groupsex போன்ற பல்வேறு விதமான sodomyக்களை காணமுடியும். இவற்றையெல்லாம் ‘Evolution of sexuality’ஆல் நிகழ்கின்றவை என்றுகூட நியாயப்படுத்தி விடலாம். ஆனால் இந்த orgy sceneஇல் ஈடுபடும் அனைவரும் முகமூடி அணிந்திருப்பர். ஒருவர் யாரென்று மற்றவருக்கு தெரியாது. இந்த ‘அல்ப்பைத்தனம்’ தான் இந்த சமூகத்திற்காக மனிதர்கள் அணியும் வேஷத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இவர்கள் அனைவரும் சமூகத்தின் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள்-அரசியல்வாதிகள், செல்வந்தர்கள் etc. என்று படத்தில் சொல்லப்படுகிறது. நமது சமூகத்தைத் தோண்டத் தோண்ட வெளிப்படும் அசிங்கங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. 

இந்த ‘Masked ball orgy sequence’ கனவா இல்லை நிஜமா என்று contemplate பண்ண முடியாத அளவுக்கு ஒரு Dreaminess  இருக்கும். இதை மனிதர்களின் subconscious(ஆழ்மனது)ஐ குறிப்பிடும் ஒரு Surrealistic sequence எனவும் கூறலாம். மனித மனதின் வக்கிரங்களை, அசிங்கங்களை, அவற்றின் Inner Demonsஐ காணமுடிகின்ற ஒரு metaphysical explorationஐ நம்மை மேற்கொள்ள வைக்கும் காட்சி இது. 

ஒரு சாதாரணமான கதையை இவ்வளவு eerieஆக சொல்வது தல Kubrickற்கு கைவந்த கலை. Erotic thriller என்று பல்வேறு தரப்புகளால் தவறாகக் கருதப்படும் ஒரு அட்டகாசமான dramatic thriller தான் ‘Eyes wide shut’. பிரதான கதாபாத்திரத்தை எந்நேரமும் பின்தொடரும் கேமரா angle அவனது வாழ்க்கை, செய்கைகள், எண்ணங்களையும் அதே நேரம் நாமும் அந்த characterஉடன் ஒன்றி நம்மை நாமே explore செய்துகொள்ளவும் ஏதுவாக இருக்கிறது. இப்படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டுசெல்லும் மற்றொரு முக்கியமான அம்சம் Jocelyn Pookஇன் bizarreஆன இசை, அதை பயன்படுத்தியுள்ள விதம். வசனங்கள் வரும் இடங்களில் எல்லாம் கதாபாத்திரங்களின் குரலுக்கு கீழே சன்னமாக வரும் suppressed BGM, conversationsஐ தொந்தரவு செய்யாமல் அழுத்தம் கொடுக்கிறது. அதுவும் அந்த இசையின் steadiness காலத்தின் ஓட்டத்தை நிதானப்படுத்தி காட்சியின் intensityஐ நமக்கு மாற்றம் செய்து ஒருவிதமான heavinessஐ உணர வைக்கிறது.

படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் Sex அல்லது Sexualityஇன் குறியீடுகள் நிரம்பி வழிகின்றன. ஒருவேளை நம் சமுதாயத்திலும் கூர்ந்து கவனித்தால் இதே நிலைதான் இருக்குமோ என்னவோ! Sex is both overflowing and overwhelming here. கனவுகள் ஆழ்மனதின் பிரதிபலிப்பு என்று சிக்மன்ட் ஃப்ராய்ட் கூறியிருக்கிறார். ஆனால் அவர் கூறும் ‘Oedipus complex’ அளவுக்கு நாம் செல்லத் தேவையில்லை. Fantasise செய்தாலும் சரி, நிஜமாகவே செய்தாலும் சரி இரண்டுமே betrayal தான்; மணவாழ்க்கையை நம்மால் முடிந்த அளவுக்கு தடுமாறாமல் கண்ணியம் காக்க வேண்டும்; பந்தத்தை வளர்க்கவேண்டும் என்ற Positiveஆன messageஐ இவ்வளவு negativity கலந்து ஒரு cocktail போலச் சொல்லியிருக்கிறார்கள். 

இவ்வளவு விஷயங்கள் இருக்கையில், நம் நாட்டில் sex என்ற வார்த்தையே tabooவாக இருக்கிறது. Sex என்ற வார்த்தையைக் கேட்டாலே முகம் சுளித்துவிட்டு அதேசமயம் மறைவாக அமர்ந்து porn பார்த்து சுயமைதுனம்(masturbation) செய்யும் ஆட்களை நினைத்தால் தான் சிரிப்பாக இருக்கிறது. பாவமாகவும் இருக்கிறது.

Advertisements