The Mississippi Adventurers

 

‘It’s Tom Sawyer the Pirate! — the Black Avenger of the Spanish Main!’

சில கதாபாத்திரங்கள் நம் மனதிற்கு மிகவும் பிடித்துபோக சில காரணங்கள் உண்டு. அதில் ஒன்று அக்கதாபாத்திரம் நம்மை போல இருப்பது. அப்படி தான் நானும் டாமும்( Tom Sawyer ). We both are too curious, we have a mind like a drunken monkey, we won’t stop at anything until we try it for ourselves and don’t care about the aftermath. சினிமாவில் டைலர் டர்டனை போல் இலக்கியத்தில் டாம் சாயர் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரம். எனக்கு புத்தகங்கள் மீது காதல் வர முக்கியமான காரணம் இந்த புத்தகம், The Adventures of Tom Sawyer. நான் இந்த புக்கை முதலில் படித்த போது எனக்கு 8 வயது தான். இப்போது வரை எத்தனை தடவை படித்தாலும் இந்த புத்தகம் தரும் உற்சாகத்திற்கும் சுவாரஸ்யத்திற்கும் குறைவில்லை.

சரி இனி டாமைப்பற்றி பார்க்கலாம், மிசிசிப்பி( Mississippi ) பள்ளத்தாக்கில் நிறைய பாசமும் சிறிது கண்டிப்பும் உள்ள தன் சித்தி பாலியுடன் வளர்கிறான் டாம். நம்ம டாமுக்கு அவன் வயசு பசங்க போல இருப்பது பிடிக்காதோ என்னவோ, எப்போதும் தன் வயசுக்கு மீறிய செயல்கள் செய்றதும் அதனால எக்குத்தப்பாய் மாட்டிக்கிறதும் தான் டாமுக்கு டைம் பாஸ். ஸ்கூலுக்கு கட் அடிச்சுட்டு நீச்சல் அடிக்க போவது, மீன் பிடிப்பது, தன்னை ஒரு கடல் கொள்ளையன்( pirate) போல பாவித்து கொண்டு புதையலை தேடி போவது, ஊரில் இருக்கும் அழகிய பெண்களுக்கு பூ கொடுக்கறது, தப்பு செஞ்சா டீச்சர் பெண்கள் நடுவில் உட்கார வைப்பார் என தெரிந்ததும் வேணும்னே தப்ப ஒத்துக்கறது, தான் செய்த தப்புக்கு மத்த பசங்கள மாட்டி விட்றது, புகைப்பது என ராஜ வாழ்க்கை தான் டாமுக்கு. இந்த rogue hero status-னாலயே ஊர்ல இருக்க எல்லா பசங்களுக்கும் டாம் தான் தலைவன். ஆனா டாம் தன் பங்குக்கு அவங்களையும் ஏமாற்றி விடுவான்.

டாமுக்கு வாயை திறந்தால் வார்த்தை வருதோ இல்லையோ கண்டிப்பா பொய் வரும். ஒரு முறை டாம் செய்த தப்புக்கு எல்லாம் சேத்தி 90 அடி நீளம் உள்ள வேலியை வெள்ளை அடிக்க சொல்லி விடுவார் பாலி சித்தி. ஆனா நம்ம டாம் தன் நண்பர்களை பேசியே ஏமாற்றி, அவர்களையே வெள்ளை அடிக்க இவனிடம் கெஞ்ச வைத்து விடுவான். இதுல அவங்க வெள்ளை அடிக்கிறதும் இல்லாம டாமுக்கு அவங்க வச்சு இருக்க ஆப்பிள், பட்டம், கோலி, தூண்டில் போல ஏதாச்சும் ஒன்னு குடுத்தா தான் வெள்ளை அடிக்க விடுவான் டாம். அன்று மாலையே வேலிக்கு வெள்ளையும் அடிச்சாச்சு, ஊருல இருக்க எல்லா பிள்ளைகளின் பொருட்களும் டாமுக்கு சொந்தம் ஆயிருச்சு.

Bible-இல் வரும் ஒரு வாசகம் கூட தெரியாமல், பள்ளியிலே அதிக வாசகம் ஒப்பித்த மாணவன் என பரிசு வாங்குவது( இதற்கு காரணம் அங்கு பரிசு கொடுக்க வந்த நீதிபதியுடன் அவரின் அழகிய பெண் கூட வந்து இருப்பதே ). மேடை மேல் இருந்து பூனையை கட்டி விட்டு தன் டீச்சரின் விக்கை(wig) பறிப்பது. ஓவியம் கற்று தருவதாக கூறி முத்தம் கொடுப்பது, தான் இறந்து விட்டதாக நம்ப வைப்பது என டாமின் white collar crime-களின் பட்டியல் மிக நீளம். புத்தகம் படித்தவர்களுக்கு தெரியும்.

இக்கதையில் வரும் இரண்டாவது முக்கிய கதாபாத்திரம் Huckleberry Finn( ஹக்). ஹக்கிற்கு அம்மா கிடையாது, அப்பா ஒரு குடிகாரன், ஹக்கோ கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு நினைக்கும் போது உறங்கிக்கொண்டு, பள்ளிக்கு செல்லாமல் சுதந்திரமாக சுற்றி திரிவான். இதனாலேயே ஹக்கை பார்க்கும் மத்த பிள்ளைகளுக்கு பொறாமையாக இருக்கும். ஆனால் வீட்டிலும் பள்ளியிலும் ஹக்கிடம் பேச கூடாது என கண்டித்து உள்ளதால் யாரும் ஹக்கிடம் பேச பயப்படுவார்கள். ஆனா நம்ம டாமை பத்தி சொல்ல வேணுமா, அடிக்கடி யாருக்கும் தெரியாமல் ஹக்குடன் சுற்றுவது, மிசிசிப்பி ஆற்றில் படகு பயணம் போவது என நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

( Tom Sawyer and Huckleberry Finn )

ஒரு இரவு நேர சாகசத்தின் பொது, சுடுகாட்டில் டாமும் ஹக்கும் ஒரு கொலையை பார்த்தராங்க ( அவங்க ஏன் சுடுகாட்டுக்கு அந்த நேரத்துல போனாங்கன்றது செம சுவாரசியமான விஷயம் அது என்னனு book- அ படிச்சு தெரிஞ்சிக்கங்க). அந்த கொலையை பார்த்து அங்க இருந்து ஓடிராங்க. அடுத்த நாள் ஊருல இந்த கொலைய பத்திதான் பேச்சு, ஆனா போலீஸ் கைது செஞ்ச ஆளு இவங்க பாத்த ஆளு இல்ல. இவங்க இதப்பத்தி யார்கிட்டயும் சொல்லறதும் இல்ல. இவங்க மனசு ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்றானு உறுத்திட்டே இருக்கு. கொஞ்ச நாள் கழிச்சு டாமும் ஹக்கும் ஒரு புதையலை கண்டு பிடிக்கிறாங்க. ஒரு சின்ன தப்பால இவங்க கண்டு புடிச்ச புதையல அந்த உண்மையான கொலையாளி எடுத்துட்டு போய்ட்றான். இனி அந்த புதையல் டாமுக்கு கிடைச்சதா, அந்த நிரபராதிய காப்பாத்த முடிஞ்சதா, டாமின் கடல் கொள்ளையன் ஆசை என்ன ஆச்சு என்பது தான் மீதி கதை.

Tom Sawyer-உம் Huckleberry Finn-உம் முதன் முதலில் 1876 ஆம் ஆண்டு மார்க் தைவான் (Mark Twain) எழுதிய தி அட்வன்சர்ஸ் ஆப் டாம் சாயர் நாவலில் தோன்றினர். மார்க் தைவான் அமெரிக்க இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர். எனக்கு மிகவும் பிடித்த நாவல் The adventures of Tom Sawyer என்றாலும், அவர் இதற்கு பிறகு எழுதிய The adventures of Huckleberry Finn அமெரிக்க இலக்கியத்தில் இன்று வரை சிறந்த புத்தகமாகவும் முக்கியமான புத்தகமாகவும் கருதப்படுகிறது.

“All modern American literature comes from Huck Finn, and hailed it as “the best book we’ve had”,If you must read it you must stop where the Nigger Jim is stolen from the boys sic. That is the real end. The rest is just cheating”                                                                                                                                        – Ernest Hemingway

இவர் எழுதிய இந்த இரு நாவல்களை மையப்படுத்தி ஊமைப் பட காலம் தொடங்கி இன்று வரை எண்ணற்ற படங்கள், நாடகங்கள், இசை நாடகங்கள், டிவி தொடர்கள், கார்ட்டூன்கள், புத்தகங்கள் என வந்து கொண்டு இருக்கின்றன. புதிதாக புத்தகம் படிக்கத் தொடங்கும் நண்பர்களுக்கும், படிக்க ஆசை படும் நண்பர்களுக்கும் என் முதல் பரிந்துரை இதுவாக தான் இருக்கும்.

       

பி.கு: 1884 ம் ஆண்டு வெளி வந்த The Adventures of Huckleberry Finn, The Adventures of Tom Sawyer- க்கு நேரடி சீக்குவல் ஆக அமைந்தது. இதில் ஹக்கும் ஜிம் என்ற தப்பி வந்த நீக்ரோவும் மிசிசிப்பி ஆற்றில் மேற்கொள்ளும் பயணம் தான் கதை. இதில் நம் டாமுக்கு செமத்தியான cameo உண்டு! இப்பதி்வில் ஹக்கை பற்றி விரிவாக சொல்ல முடியவில்லை, முடிந்தால் மற்றொரு பதிவில் சொல்கிறேன்.

Trivia: Twain named his fictional character after a San Francisco fireman whom he met in June 1863. The real Tom Sawyer was a local hero, famous for rescuing 90 passengers after a shipwreck. The two remained friendly during Twain’s three-year stay in San Francisco, often drinking and gambling together.

புதையல் என்ன ஆனது என்று தெரிந்துகொள்ள விரும்புவர்களுக்கு.

The Adventures of Tom Sawyer pdf, link 1link 2.

The Adventures of Huckleberry Finn pdf, link 1link 2

-thekill

 

Advertisements